பாராட்டை போல் விமர்சனங்களை ஏற்க வேண்டும்...ராஜுவுக்கு கமல் கொடுத்த அட்வைஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 9 வாரங்களை கடந்து, கிட்டதட்ட இறுதிப்பகுதியை நெருங்கி வருகிறது. இந்த வாரத்தின் நிறைவுப்பகுதி எபிசோட்டை தொகுத்து வழங்க கமல் மீண்டும் வந்துள்ளார்.
வந்த முதல் நாளே அபிஷேக், பிரியங்கா இடையேயான நட்பை பற்றியும், அபிஷேக் இன்ஃபுலியன்ஸ் செய்கிறார் என்ற விஷயங்கள் பற்றியும் பேசினார். அதே போல் பிரியங்கா, அண்ணாச்சி மற்றும் தாமரை மீது வைத்த குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி நேருக்கு நேராக கேட்டு வறுத்தெடுத்தார்.

காப்பாற்றப்பட்ட ராஜு
ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளை கமல் கேட்டதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். நிரூப் உள்ளிட்டவர்களிடம் கேப்டன்சி பற்றி பேசிய கமல், நாமினேட் செய்யப்பட்ட 10 பேரில் நேற்று முதல் ஆளாக ராஜுவை காப்பாற்றினார். இதனால் இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

வெளியேற போவது யார்
இந்நிலையில் நிகழ்ச்சியின் 63 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் பேசும் கமல், நேற்று முதல் ஆளாக ராஜு காப்பாற்றப்பட்டார். இன்று முதல் ஆளாக காப்பாற்றப்பட போவது யார். உங்களின் தேர்வுகளின் அடிப்படையில் காப்பாற்றப்பட போகிறவர்களின் பட்டியல் என்ன. இந்த வாரம் வெளியேற போகிறவர் யார். இன்று இரவு என முடிக்கிறார்.

ராஜுவை கேள்வி கேட்ட கமல்
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் பேசும் கமல், இந்த வார டாஸ்கில் ராஜு அவர் மட்டும் ஜொலித்து விட்டு, மற்றவர்களை இருட்டில் தள்ளி விட்டாரோ என கேட்கிறார். அதனை ராஜு மறுக்க, இல்லை நான் நடுவரிடமே கேட்கிறேன். நான் பேசினால் அது கருத்தை தினிப்பது போல் ஆகி விடும் என்கிறார். சஞ்சீவ் கூறுகையில், ராஜு முன் வைத்த கருத்துக்கள் முதிர்ச்சி அற்றதாக இருந்தன என்றார். அதற்கு ராஜு, டீமின் ஒருங்கிணைப்பு இல்லை என்கிறார்.

கமல் கொடுத்த அட்வைஸ்
இதற்கு பதிலளிக்கும் கமல், உங்கள் மீதான பாராட்டை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்களோ அதுபோல் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டால் ரேட்டிங் மட்டுமல்ல உங்கள் மனதிற்கும் திருப்தி கிடைக்கும் என ராஜுவிற்கு அட்வைஸ் தருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், இப்போ தான் ராஜுவிற்கு சரியான அட்வைசை கொடுத்துள்ளார். நேற்று பிரியங்கா, இன்று ராஜுவா என கேட்டுள்ளனர்.

சரியா சொன்னீங்க ஆண்டவரே
ஆண்டவரே சரியா சொன்னீங்க. நீங்க சொல்வது உண்மை தான். கமல் சார், ரசிகர்களின் ட்வீட்டை எல்லாம் பார்த்திருப்பார் போல. ஆண்டவர் செம எனர்ஜியோட திரும்பி வந்திருக்கார் போல. வந்ததுமே விசாரணையை துவக்கி, அனைவரையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாரே. ராஜுவை நேற்று பாராட்டுவதை போல் இருந்தது. இன்று மொத்தமாக போட்டு தாக்கி விட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











