அம்மாவின் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது.. ஃபர்ஸ்ட் லுக் பார்த்து கடுப்பான பிரபலம்!

Recommended Video

அம்மாவின் ஆன்மா கூட உங்களை மன்னிக்காது

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

குயின் படத்தின் மூலம் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத் ஜெயலலிதா பயோபிக்கில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்றும் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் சினிமா விமர்சகர் சுமித் கேடல், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து விட்டு, தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென தலைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியான தகவல் அறிந்ததும் நெட்டிசன்கள் உடனடியாக ட்விட்டரில் ஆஜராகி தலைவி ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மணிகர்ணிகா

மணிகர்ணிகா

கங்கனா ரனாவத்தின் நடிப்பில் கடைசியாக வெளியான மணிகர்ணிகா படம் ஜான்சி ராணி லக்‌ஷ்மி பாயின் பயோபிக்காக உருவாகி இருந்தது. அந்த படத்தில் ஜான்சி ராணியாக கச்சிதமாக பொருந்தியிருந்த கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார் என்ற செய்தி அறிந்ததும், நிச்சயம் அந்த கதாபாத்திரத்திற்கு நீதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அனிமேஷன் திரைப்படமா?

சூப்பர்ஸ்டார் ஹீரோயினாக இருந்து பின்னர் மக்கள் தலைவியாக மாறும் ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் முதலமைச்சர் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தை காட்டும் போது, அது அப்படியே ஒரு அனிமேஷன் திரைப்படத்தை பார்த்த ஃபீல் தான் கொடுக்கிறது. வெறும் டீஸரை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது, படம் வெளியான பின்பு தான் கங்கனாவின் நடிப்பு எந்தளவுக்கு படத்திற்கு கை கொடுக்கிறது என்பதை பார்க்க முடியும்.

அம்மாவின் ஆன்மா

பிரதமர் மோடியின் பயோபிக்கை செய்கிறேன் என்ற பெயரில் முதலில் இப்படி தான் சொதப்பினார்கள். தற்போது அயன் லேடி ஜெயலலிதாவின் பயோபிக்கும் இவர்கள் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்றும், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் ஜெயலலிதா ஜீயின் ஆன்மா கூட கோபப்படும் என சினிமா விமர்சகர் சுமித் கேடல் ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: thalaivi தலைவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X