ஆசையா ட்வீட் போட்ட சின்மயி: மரண கலாய் கலாய்த்த இயக்குநர்
Recommended Video
சென்னை: பாடகி சின்மயியின் கூலிங் கிளாஸை கிண்டல் செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
பாடகி சின்மயி வாக்களித்துவிட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சந்தோஷத்தை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் வெயிலுக்கு இதமாக கூலிங் கிளாஸ் அணிந்திருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்த இயக்குநர் சி.எஸ். அமுதனால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.
அமுதன்
வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று அமுதன் சின்மயியின் கண்ணாடி பற்றி கலாய்த்து ட்வீட் போட்டார்.
பதில்
அமுதன் தன்னை கலாய்த்து போட்ட ட்வீட்டை பார்த்து உங்கள் உதவியுடன் தான் என்று பதில் அளித்தார் சின்மயி.
ஓட்டு
ஓட்டு போட்ட பிறகு குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. புகைப்படத்தில் கணவர் ராகுல் மட்டும் இல்லை.
ராகுல்
சின்மயியின் கணவர் ராகுல் மன்மதுடு 2 படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கலில் உள்ளார். என்ன சார், ஓட்டு போடாமல் இப்படி வெளிநாட்டில் இருப்பது சரியா என்று நெட்டிசன்கள் ராகுலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











