இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை.. ரஜினி மேல அப்படி என்னதான் காண்டு.. சொல்லுங்க அமுதன் சொல்லுங்க!

சென்னை: தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இயக்குநர் சி.எஸ். அமுதன் கொரோனா விழிப்புணர்வு என்ற பேரில், தமிழ் சினிமா நடிகர்களை ட்ரோல் செய்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களை ட்ரோல் செய்து சில படங்கள் எடுக்கப்பட்டு இருக்கும். அதே போல கோலிவுட் படங்களை ட்ரோல் செய்து தமிழ் படம் என்ற பெயரில் இவர் இயக்கிய இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

மற்ற நடிகர்களை விட ரஜினி மற்றும் அஜித்தை ஓவராக சி.எஸ். அமுதன் ஓட்டி வருகிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன

ஒரே ட்வீட்டில்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு என்ற போர்வையில், தமிழ் சினிமா நடிகர்களை ஒரே ட்வீட்டில் இயக்குநர் சி.எஸ். அமுதன் பங்கமாக கலாய்த்துள்ளார். "இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லங்றத உணரணும். நம்ம ஆபீஸ்ல, போயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோருக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்லயே கொஞ்சம் சில் பண்ணு மாப்பி!

இப்ப இல்லனா எப்பவும் இல்ல

இப்ப இல்லனா எப்பவும் இல்ல

சமீபத்தில் லீலா பேலஸில் நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நுழைவு குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சு, தமிழ் மக்களுக்கு அல்வா கொடுப்பது போல் இருந்ததாக, உடனடியாக, சி.எஸ். அமுதனிடம் இருந்து கிண்டல் செய்யும் ட்வீட் ஒன்று வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது, "இப்ப இல்லனா எப்பவும் இல்ல" என்ற வார்த்தையை கலாய்த்து அமுதன் பதிவிட்டுள்ளார்.

அஜித்தையும்

அஜித்தையும்

அதே போல தமிழ் படம் 2வில் நடிகர் அஜித்தின் விவேகம் படத்தை கிளைமேக்ஸ் வரை வச்சு பங்கமாக கலாய்த்திருப்பார் சி.எஸ். அமுதன், படத்தின் காட்சிகள் குறித்த ட்ரோல்களை ரசிகர்கள் ரசித்தாலும், குறிப்பிட்ட சில நடிகர்களை டார்கெட் செய்து பங்கமாக ஓட்டுவதை அமுதன் ஏன் செய்கிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ட்வீட்டிலும், முதலில், "வலிமையை காட்டுற நேரம் இல்லை" என அஜித்தை வம்பிழுத்துள்ளார்.

இவங்களையும் விட்டு வைக்கல

இவங்களையும் விட்டு வைக்கல

ரஜினி, அஜித் மட்டுமின்றி, "போயி வேற வேலை இருந்தா பாருங்கடான்னு" சொன்ன விஜய்சேதுபதியின் வார்த்தைகளையும், சார்ந்தோருக்கு இரங்கல் என கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகளையும் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார். மேலும், கடைசியாக சில் பண்ணு மாப்பி என விஜய் குட்டி ஸ்டோரி பாடலில் பாடிய வரிகளையும் போட்டுள்ளார்.

தப்புத் தப்பாக

தப்புத் தப்பாக

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்களை ட்ரோல் செய்யும் நோக்கத்தோடு சி.எஸ். அமுதன் பதிவிட்ட அந்த ட்வீட்டில் ஏகப்பட்ட தமிழ் பிழைகள் தாண்டவம் ஆடியதை, ரசிகர்கள் கண்டுபிடித்து, முதலில், தமிழில் எழுத கற்றுக் கொள்ளுங்கள், அப்புறம் கிண்டல் செய்யலாம் என அமுதனையே பங்கமாக கலாய்த்துள்ளனர்.

தமிழ் படம் 3

தமிழ் படம் 3

தமிழ் படம் 2ம் பாகத்தின் ஆரம்ப பாடலில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை கலாய்த்திருந்த அமுதன், தற்போது தொடர்ந்து அவரை ட்ரோல் செய்து வருவதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், தமிழ் படம் 3க்கு ரெடியாகி வருகிறீர்கள் போல என அந்த படத்தை எதிர்பார்த்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X