இது தான் எண்ட்கேமே.. சூர்யாவை தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பிரபல இயக்குநர்!

Tamizh Padam director CS Amudhan donates 50 Thousand rupees for TamilNadu CM corona relief fund.

சென்னை: கொரோனா போரில் வென்று மக்களை காப்பாற்ற வேண்டும் என இன்றும் வீடியோ ஒன்று வெளியிட்டு உலக தமிழர்களிடன் நிவாரண நிதி அளிக்கக் கோரி உள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி முதல்வரை நேற்றே நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிதியை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கினர்.

இந்நிலையில், தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2, ரெண்டாவது படம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் வேண்டுகோள்

கொரோனா இரண்டாம் அலையால் ஏகப்பட்ட மக்கள் பாதித்து வருகின்றனர். உரிய மருத்துவ வசதி கிடைக்காமலே பலர் உயிரிழக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா குடும்பம் உதவி

சூர்யா குடும்பம் உதவி

முதல்வரின் கோரிக்கையை ஏற்று பழம்பெரும் நடிகரான சிவகுமார் தனது மகன்கள் மற்றும் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி உடன் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இயக்குநர் அமுதன்

இயக்குநர் அமுதன்

இந்நிலையில், சூர்யா குடும்பத்தை தொடர்ந்து இயக்குநர் சி.எஸ். அமுதன் தானும் முதல்வர் நிவாரண நிதிக்கு தன்னால் முடிந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட் உடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இது தான் எண்ட்கேம்

இது தான் எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ் படத்தில் வருவது எண்ட்கேம் இல்லை. இதுதான் ரியல் எண்ட்கேம் என்பதை நெட்டிசன்களுக்கு உணர்த்தும் வகையில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன். தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

கொரோனா நிவாரண நிதிக்கு மற்ற பிரபலங்கள் உதவ தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மரணம் நிகழும் என காக்க காக்க பாடல் வரிகளை எல்லாம் போட்டு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தனிப்பட்ட முறையிலாவது மக்களுக்கு பெரிய அளவில் முன்னணி நடிகர்கள் உதவ முன் வரவேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X