”மேட்டர் தொடர்கிறது” நித்யானந்தாவை கிண்டலடித்த சி.எஸ். அமுதன்
சென்னை: ஐன்ஸ்டீனின் சமன்பாட்டிற்கு புதுவிளக்கம் கொடுத்த நித்யானந்தாவை கிண்டலடித்துள்ளார் சிஎஸ்.அமுதன்.
கிண்டலுக்கும் நக்கலுக்கும் பெயர் போனவர் இயக்குனர் சிஎஸ்.அமுதன். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படம் 2 மாபெரும் வெற்றி பெற்றது.

இப்போது நித்யானந்தாவின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஐன்ஸ்டினின் நிறை ஆற்றல் சமன்பாடு குறித்து விளக்கமளிக்கிறார். ஐன்ஸ்டினின் எம்சி ஸ்கொயர் ஃபார்முலாவில், எம்சி ஸ்கொயர் என்றால் என்ன? தீவிரத்திற்கும் தொடர்ச்சிக்கும் உள்ள வேறுபாடுதான் எம்சி ஸ்கொயர்.
மேட்டர் மற்றும் ஆற்றல் என்றால் என்னவென்றால், மேட்டர் என்பது தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை செய்வது ஆற்றல் என்பது அதன் தீவிரத்தன்மை. இந்த செயல்பாடு குறுக்கு புத்தி உள்ளவர்களுக்கும், நேர்மறையாக சிந்திப்பவர்களுக்கும் வேறுபடும் என சில விஷயங்களை குறிப்பிடுகிறார்.
ஒருவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ள சி.எஸ்.அமுதன்.. "அவர் சொல்ல வருவதை நீங்கள் யாருமே கவனிக்க வில்லை. மேட்டர் தொடர்கிறது" என குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் செயல்படுதல் என்பதற்கு மேட்டர் என்ற அர்த்ததில் நித்தியானந்தா சொல்வதை அவர் கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











