GOAT: தளபதியின் கோட் பட இன்டர்வெல் காட்சியைப் பகிர்ந்த தல தோனி? சந்தோசப்பட்ட ரசிகர்கள் கடைசியில் ஷாக்!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ட்விட்டர் பக்கத்தில், கோட் படத்தின் இடைவேளைக் காட்சியைப் பகிர்ந்ததாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம்.

goat vijay ms dhoni

இயக்குநர் வெங்கட் பிரபு தீவிரமான தோனி ரசிகர், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிரமான ரசிகரும் கூட. கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்வதைப் போன்ற காட்சி திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டும் இல்லாமல், ஜீவன் கதாபாத்திரம் குடும்பத்தினருடன் அமர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையடும் மேட்ச் பார்க்கும் காட்சி என படத்தில் பல இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனி ரெஃபரன்ஸ் வந்து கொண்டே இருக்கும்.

goat vijay ms dhoni

இது பார்ப்பவர்களுக்கு முழுக்க முழுக்க சர்ப்ரைஸாகவே அமைந்தது. குறிப்பாக தோனி விளையாட பெவிலியனில் இருந்து ஆடுகளத்திற்குள் வரும் காட்சியெல்லாம் தரமான சம்பவமாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளின்போது தோனி, களமிறங்கி வரும்போது எல்லாம் அவருக்கென ஒரு எண்ட்ரி பாடல் இசைக்கபட்டு வந்தது. அப்படியான நிலையில், படத்தில் அவருக்கு படையப்பா தீம் மியூசிக் பின்னணியில் இசைக்கப்பட்டது.

goat vijay ms dhoni

Defiantly Not: மேலும் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வரும் இளைய தளபதி விஜய், இடைவேளைக் காட்சிக்கு முன்னதாக, மெட்ரோ ட்ரைனில் தளபதி விஜய் உடன் சண்டை செய்வார். இந்தக் காட்சிகள் அனைத்தும் தியேட்டரையே அதிர வைத்தது. ரசிகர்களின் ஆரவாரத்தினால், தியேட்டரே அதிரும் அளவிற்கு ஆனாது. இப்படியான நிலையில் இடைவேளைக் காட்சியின் போது இளைய தளபதி விஜய், தோனியிடம் நீங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது, " Definitely Not" எனக் கூறினார்.

goat vijay ms dhoni

மகிழ்ச்சி: தோனி கூறிய அந்த வார்த்தையை டீ- சர்ட்டில் அணிந்தபடி, இளைய தளபதி ஐபிஎல் பார்க்கச் செல்வார். இந்தக் காட்சியெல்லாம் யாருமே எதிர்பார்க்காத காட்சிகளாக அமைந்தது. இந்நிலையில் இளைய தளபதி, Defiantly Not என்ற வாசகம் அமைந்த டீ- சர்ட் அணிந்து வரும் ஸ்டில் மகேந்திர சிங் தோனி என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.. மேலும், மஞ்சள் நிற ஹார்ட்டினை கேப்சனும் அந்த பதிவில் இடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனிதான் பகிர்ந்துள்ளார் என மகிழ்ச்சியில் ஒருபக்கம் கொண்டாட, மறுபக்கம் இது போலி எக்ஸ் கணக்கு என்பதை தெரிந்து கொண்ட விஜய் ரசிகர்களோ அமைதியாக இருக்கின்றனர்.

goat vijay ms dhoni

வசூல் வேட்டை: படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் ரூபாய் 45 கோடிகள் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 38 கோடியும், மலையாளத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடியும், தெலுங்கில் இரண்டு கோடியும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என அறிவிக்கவுள்ளது. மொத்தத்தில் படம் முதல் நாளே நல்ல வசூல் குவித்துள்ளதால், ரசிகர்களும் படக்குழுவினரும் கூறியதைப்போல் படம் ரூபாய் 1000 கோடி வசூலை படைத்த முதல் தமிழ் படம் என்ற சாதனையைப் படைக்கும் என கூறப்படுகின்றது. ஆனால் இது விஜய் நடிப்பில் வெளியான முந்தையப் படமான லியோவின் முதல் நாள் வசூலை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X