ரஜினியை வைத்து ட்விட்டரை கலாய்த்த சிஎஸ்கே...மீம்களை தெறிக்க விடும் நெட்டிசன்கள்
சென்னை : 14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ம் தேதி துவங்க உள்ளன. அதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த பரபரப்பை மேலும் அதிகப்படுத்த ட்விட்டரும் தன் பங்கிற்கு ஒவ்வொரு அணிக்கும் ஜெர்சிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த ஜெர்சிகளுடன் அணிகளின் பெயர்களை எழுதி ட்விட்டர் வெளியிட்டது.

இதில் தவறுதலாக பெங்களூரு அணியின் சிவப்பு பிற ஜெர்சிக்கு பதில், சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில், சிஎஸ்கே லோகோவுடன் வெளியிட்டது. இது ட்விட்டர் வாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. பலரும் இதனை கவனித்து ட்விட்டர், சிஎஸ்கே.,விற்கு விளம்பரம் செய்வதாக கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி, ரஜினியின் படையப்பா படத்தில் வரும் ஒரு காட்சியின் ஸ்டில்லை பதிவிட்டு ட்விட்டரை கலாய்த்துள்ளது. சிவப்பு நிற புடவையில் வரும் ஹீரோயின் சவுந்தர்யாவை பார்த்ததும் மாடு துறத்தும். அப்போது ரஜினி, மஞ்சள் சாயத்தை ஊற்றி, சிறப்பு நிற புடவையை மஞ்சள் நிறமாக மாற்றி விடுவார்.
இந்த காட்சியின் ஸ்டில்லை தான் சிஎஸ்கே., தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன் விசில் போடு எல்லோ பிளே போல்டு ஆர்சிபி என குறிப்பிட்டுள்ளது. இந்த மீம் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











