எனக்கு கேப்டன் பொறுப்பு பிடிக்காது... ஆனா அதுக்கு என்னை பிடிக்கும்... தோனியின் வேற லெவல் மீம்ஸ்!
சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா விலகியுள்ள நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் அந்த பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், மீண்டும் அவர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே டீம்
சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணி துவக்கத்திலிருந்தே செயல்பட்டு வந்தார் தோனி. அவரது கேப்டன்ஷிப்பில் 4 முறை அணி ஐபிஎல்லில் கோப்பையை வென்றுள்ளது. அணியை சிறப்பாக வழிநடத்திவந்த தோனி 2022 ஐபில் துவக்கத்திற்கு முன்னதாக கேப்டன்ஷிப்பை ராஜினாமா செய்தார்.

கேப்டன் ஜடேஜா
இதையடுத்து ஆல்ரவுண்டர் ஜடேஜாவிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அவரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அணியின் கேப்டனாக தொடர வைப்பதே சிஎஸ்கேவின் விருப்பமாக இருந்தது. ஆனால் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவரால் சரிவர நிர்வகிக்க முடியவில்லை. கடந்த 8 போட்டிகளில் சிஎஸ்கே 2ல் மட்டுமே வெற்றி பெற்று சொதப்பியது.

ரசிகர்கள் கோரிக்கை
தொடர்ந்து 6 முறை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த நிலையில், மீண்டும் தோனியை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே வலுத்தது. மேலும் இந்த போட்டிகளில் சரியான ஆட்டத்தையும் ஜடேஜாவால் கொடுக்க முடியவில்லை. அவருக்கு இருந்த கேப்டன்ஷிப் பிரஷரும் இதற்கு காரணமாக கூறப்பட்டது
Recommended Video

மீண்டும் கேப்டன்
இதையடுத்து தற்போது ஜடேஜா சிஎஸ்கே கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கேப்டன் கூல் என்று கூறப்படும் தோனிக்கே மீண்டும் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அணி மீண்டும் பார்மிற்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் தெறிக்கும் மீம்ஸ்
இந்நிலையில் தோனியை வைத்து ட்விட்டரில் பல மீம்ஸ்களை ரசிகர்கள் போட்டு வருகின்றனர். குறிப்பாக கேஜிஎப் 2 படத்தில் வரும் டயலாக்குகளை தோனிக்கு பொருத்தி வருகின்றனர். அந்த வகையில் கேப்டன்சி கேப்டன்சி கேப்டன்சி... எனக்கு பிடிக்காது அதை தவிர்ப்பேன். ஆனால் கேப்டன்சிக்கு என்னை பிடிக்கும் என்று மீம்ஸ்களை பறக்க விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











