ஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட்டால் ஆளாளுக்கு அவரை விளாசத் துவங்கிவிட்டனர்.
தமிழ்ப் புத்தாண்டு தின ஸ்பெஷலாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் சன் டிவியில் ஒளிபரப்பானது.
அதை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் ஒரு ட்வீட் போட்டார்.
தல தோனி
நம் தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் தலைவர் மற்றும் தல ஆட்டம் என்று பேட்ட மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி குறித்து ட்வீட் செய்தார் கார்த்திக் சுப்புராஜ்.
#Thalaivar & #ThalaDhoni legends forever 🙏
#PettaOnSunTv #Petta #CSKvKKR #WhistlePodu
விஸ்வாசம்
கார்த்திக் சுப்புராஜ் பாசத்தில் தல தோனி என்று ட்வீட் போட தல என்றால் அது அஜித் மட்டும் தான் என்று கூறி ரசிகர்கள் சண்டைக்கு வந்துவிட்டனர். மேலும் விஸ்வாசம், பேட்ட வசூல் குறித்து பெரிய சண்டையே நடந்துள்ளது.
பேட்ட
பேட்ட, விஸ்வாசம் வசூலை வைத்து கார்த்திக் சுப்புராஜை தல ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். ரஜினி, தல ரசிகர்கள் மீண்டும் மோதிக் கொண்டனர்.

கேகேஆர்
முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியபோது அது குறித்து ட்வீட் போட்டு கஸ்தூரி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில் நேற்று அதே அணிகள் மீண்டும் மோதியபோது கார்த்திக் சுப்புராஜ் மாட்டிக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











