twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6,700 கப்கேக் வாழ்த்து: இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும்வரை ரஜினியை யாராலும் அடிச்சுக்க முடியாது

    By Siva
    |

    Recommended Video

    6,700 கப் கேக்கால் ரஜினியின் உருவத்தை வரைந்து ரஜினி பிறந்தநாளுக்கு வாழ்த்து- வீடியோ

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாளையொட்டி சென்னை சிட்டி சென்டர் மாலில் 6 ஆயிரத்து 700 கப்கேக்குகள் வைத்து தலைவரின் புகைப்படத்தை வரைந்துள்ளனர்.

    ரஜினிகாந்த் கடந்த 12ம் தேதி தனது 67வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை சந்தித்து வாழ்த்த ரசிகர்கள் போயஸ் கார்டனுக்கு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டனர்.

    ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கூடிய ரசிகர்களால் ரஜினியை சந்திக்கவே முடியவில்லை.

    தடியடி

    தடியடி

    பிறந்தநாள் அன்று ரஜினியை சந்திக்கும் ஆசையில் வந்தவர்களுக்கு போலீஸ் கையில் தடியடி தான் பரிசாக கிடைத்தது. இது நியாயமே இல்லை என்று ரசிகர்கள் நினைத்தனர்.

    கேக்

    கேக்

    சென்னையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் 6 ஆயிரத்து 700 கப்கேக்குகளை வைத்து ரஜினியின் புகைப்படத்தை வரைந்து தலைவா என்று எழுதினர். ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கப் கேக்குகள் பயன்படுத்தப்பட்டது.

    72 மணிநேரம்

    72 மணிநேரம்

    2 மாதங்களாக திட்டமிட்டு 72 மணிநேரம் வேலை பார்த்து கப்கேக்குகளை பேக் செய்தோம். நாங்கள் தலைவரின் தீவிர ரசிகர்கள். அதனால் இது எங்கள் சார்பில் அவருக்கான பிறந்தநாள் வாழ்த்து என்று கப் கேக்குகள் செய்த பேக்கரியின் பிரதிநிதி சுசித்ரா கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    அமர்க்களம்

    அமர்க்களம்

    ரஜினியின் பிறந்நதாள் அன்று அவரை வாழ்த்தி ஏகப்பட்ட போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டினர். ரசிகர்கள் இவ்வளவு அமர்க்களம் செய்ய ரஜினியோ பிறந்தநாள் அன்று ரகசிய இடத்தில் இருந்தார்.

    English summary
    Fans have created a portrait of Rajinikanth with 6700 cupcakes on his 67th birthday at City Centre Mall in Chennai. While Rajinikanth fans flocked Poes Garden, he went to a secret place on the special day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X