சோனாக்ஷிக்கும், ஷாஹித்துக்கும் 'அது' வந்துருச்சாமே..?
மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கும், ஷாஹித் கபூருக்கும் இடையே காதல் பூத்திருப்பதாக பாலிவுட்டில் மெல்ல கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
இருவரும் நெருங்கிப் பழகுவதாகவும், அவர்கள் இருவரின் இதயங்களும் இடம் மாறி விட்டதாகவும் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து ஆர்.. ராஜ்குமார் படத்தில் ஜோடி போட்டிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது நிஜமாகவே இருவரும் ஜோடியாக காணப்படுவதாக பேச்சு அடிபடுகிறது.

முடிந்தவரை நெருக்கம்
எப்போதெல்லாம் டைம் கிடைக்கிறதோ அப்போதெல்லா்ம் இருவரும் சேர்ந்து காணப்படுகிறார்களாம்.

படப்பிடிப்பின்போதே பத்திக்கிச்சாம்...
ஆர் ராஜ்குமார் படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். இப்போது தீவிரமடைந்து தீயாய் காதலில் நீந்தித் திளைக்கிறார்களாம்.

எனக்கு சோனாக்ஷிதான் ராசி...
யாரிடம் பேசினாலும் சோனாக்ஷி குறித்து சிலாகித்து நாலு வார்த்தையாவது பேசாமல் முடிப்பதில்லையாம் ஷாஹித். தனக்கு மிகவும் ராசியானவர் என்றும் புகழாரம் சூட்டுகிறாராம்.

அகமதாபாத்தில் வைத்து சேலை கொடுத்தாராம்
சமீபத்தில் அகமதாபாத்தில் வைத்து அழகான சிவப்பு நிற சேலையை சோனாக்ஷிக்குப் பரிசாக கொடுத்தார் ஷாஹித் என்கிறார்கள்.

கரீனா முதல்
ஷாஹித் கபூர் முன்பு கரீனா கபூருடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். உலகத்திற்கே தெரிந்த விஷயம் இது. பின்னர் இருவரும் பிரிந்து போயினர். அதேபோல ரன்வீர் சிங்குடன் சோனாக்ஷி நட்போடு இருப்பதாகவும் பேசப்பட்டது. இப்போது சோனாக்ஷியையும், ஷாஹித்தையும் இணைத்துப் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
நிஜத்திலும் ஜோடி சேருவார்களா.. இல்லை டைம் பாஸா என்பது போகப் போகத் தெரியும்.


Click it and Unblock the Notifications











