அவருக்கு மட்டும்தான் 'அது'க்கான காப்பி ரைட்ஸ் இருக்கா? உச்சக்கட்டத்தை எட்டிய நடிகைகளின் மோதல்!

மும்பை: நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் டாப்ஸி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். அதேநேரத்தில் நடிகை டாப்ஸியும் பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைக்க முயற்சித்து வருகிறார்.

கடும் போட்டி

கடும் போட்டி

கங்கனாவை காட்டிலும் கடந்த சில நாட்களாக டாப்ஸி அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் இருவருக்குள்ளும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

லூஸ் டாக்

லூஸ் டாக்

இதன் வெளிப்பாடாக இரண்டு நடிகைகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே தனது லூஸ் டாக்கால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் கங்கனா.

டிவிட்டரில் கண்டனம்

டிவிட்டரில் கண்டனம்

இதனால் கங்கனா ரனாவத் பேசுவதற்கு முன்பு இரண்டு முறை ஃபில்டர் பண்ணி பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார் டாப்ஸி. இதனால் கோபமடைந்த கங்கனாவில் தங்கை டிவிட்டரில் டாப்ஸியை வறுத்தெடுத்தார்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்

மன்னிப்பு கேட்க மாட்டேன்

மேலும் கங்கனாவின் சுருள் தலைமுடியை டாப்ஸி காப்பி அடிக்கிறார் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள டாப்சி, நான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். பேச்சுக்களை வடிகட்டித்தான் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காப்பி ரைட்ஸ்?

காப்பி ரைட்ஸ்?

அப்படி இல்லாவிட்டால் பிரச்சனை ஏற்படும் என்ற அவர் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்ய முடியும். நான் எதையும் காப்பி அடிக்கவில்லை என்றார். மேலும் கங்கனாவுக்கு மட்டும்தான் சுருள் தலைமுடிக்கான காப்புரிமை உள்ளதா? எனக்கும் பிறந்ததில் இருந்தே தலைமுடி அப்படித்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட்டில் பரபரப்பு

முன்னணி நடிகைகள் சிறுபிள்ளைதனமாக இப்படி மோதிக்கொள்வது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் இந்த பிரச்சனைக்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X