Krithi Shetty: த்ரிஷாவை பற்றி அப்படியொரு வார்த்தை சொன்ன 19 வயது நடிகை.. ஸ்டன்னான ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி திரைப்படத்தின் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா பற்றி பேசிய வார்த்தைகள் ரசிகர்களை ஸ்டன் ஆக்கி உள்ளது.

2003ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிறந்த க்ருத்தி ஷெட்டிக்கு இப்போது தான் 19 வயதே ஆகிறது. கடந்த 2019ல் பாலிவுட்டில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 படத்தின் மூலம் அறிமுகமான க்ரித்தி ஷெட்டி அதற்குள் 10 படங்களில் நடித்து விட்டார்.

சூர்யாவின் வணங்கான் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரியாக நினைத்துக் கொண்டிருந்த க்ரித்தி ஷெட்டிக்கு அவரது கனவு பலிக்காமல் போக வாரியர் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

Custody actress Krithi Shetty says Trisha is younger than her in look wise stuns fans

விஜய்சேதுபதிக்கு மகளாக: 2021ல் தெலுங்கில் வெளியான உப்பென்னா படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார். ஹீரோயினாக நடித்த முதல் படமே அவரை ரசிகர்கள் மத்தியில் வேறலெவல் இடத்துக்கு கொண்டு சென்றது.

அதே ஆண்டு வெளியான நானியின் ஷியாம் சிங்கா ராய் படத்திலும் ஹீரோயினாக நடித்து இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தார் க்ரித்தி ஷெட்டி.

பாலா படத்தில் படாத பாடு பட்டு: சூர்யாவின் வணங்கான் படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க நினைத்தார் க்ரித்தி ஷெட்டி. இயக்குநர் பாலா சூர்யாவையும் க்ரித்தி ஷெட்டியும் வேகாத வெயிலில் ஓட விட்டு ஏகப்பட்ட டார்ச்சர்களை கொடுத்த நிலையிலும், இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி எந்த பிரச்சனையும் செய்யாமல் நடித்து வந்தார்.

ஆனால், சூர்யா படத்தில் இருந்து விலகிய நிலையில், க்ரித்தி ஷெட்டி அருண் விஜய்யுடன் ஜோடி சேராமல் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

கஸ்டடியில் கலக்கல்: லிங்குசாமியின் தி வாரியர் படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் பைலிங்குவல் படமாக வெளியாகி உள்ள கஸ்டடி படத்தில் கடைசி வரை கதையோடு வந்து கலக்கி இருக்கிறார் க்ரித்தி ஷெட்டி.

Custody actress Krithi Shetty says Trisha is younger than her in look wise stuns fans

த்ரிஷா பற்றி என்ன சொன்னார்: இந்நிலையில், சமீபத்தில் கஸ்டடி படத்தின் ப்ரமோஷனுக்காக யூடியூப் ஒன்றில் பேட்டியளித்த க்ரித்தி ஷெட்டி தான் நடிகை த்ரிஷாவின் தீவிர ரசிகை என்றும் தன்னை விட சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்க த்ரிஷா என்றும் பேசி உள்ளார்.

40 வயதான த்ரிஷா 19 வயதான சின்ன பொண்ணு போல இருக்காங்க என அவர் பேசியதை கேட்ட த்ரிஷா ரசிகர்கள் நம்மை விட தீவிர த்ரிஷா வெறியராக இருப்பார் போல என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X