அடேங்கப்பா.. வெள்ளிக்கிழமை இத்தனை படங்கள் வெளியாகிறதா.. வரிசை கட்டி காத்திருக்கும் படங்கள்!
சென்னை : கடந்த மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் வெளியானது.
இந்த வார இறுதியில் உங்களை மகிழ்விக்க தயாராக இருக்கும் படங்களின் பெயர்களை இப்போது பாக்கலாம்.

கஸ்டடி : வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம் கஸ்டடி. இதில்,அரவிந்த் சாமி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் மே12ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் மூலம் நாக சைதன்யான கோலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுக்கிறார்.

பீட்சா 3 மம்மி : விஜய்சேதுபதி நடித்த பீட்சா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, சினிமாவில் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா 3-ம் பாகம் பீட்சா 3 மம்மி' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், கன்னடம், இந்தி,தெலுங்கில் மே12ந் தேதி வெளியாக உள்ளது.

இராவண கோட்டம் : விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இராவண கோட்டம். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ள ,இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது,
ஃபர்ஹானா : நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட்ரோலில் நடித்துள்ள படம் ஃபர்ஹானா. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 12ந்தேதி வெளியாக உள்ளது.
குட் நைட் : பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ராசாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் தற்போது, விநாயக் சந்திரசேகர் இயக்கி உள்ள குட் நைட் படத்தில் நடித்தார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
சக்ரபதி (இந்தி) : இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் உருவாகி உள்ள சத்ரபதி படத்தின் மூலம் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிரபாஸ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் அதே பெயரில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் ஹிந்தியில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் வரும் மே 12ந் தேதி வெளியாக உள்ளது.
லைவ் : மம்தா மோகன்தாஸ், சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர், லைவ் திரைப்படம்மே 12 அன்று வெளியாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தை தேசிய விருது வென்ற வி.கே.பிரகாஷ் இயக்கியிருக்கிறார். அர்பன் பங்கேஜா மற்றும் நிதின் குமாரின் புதிய தயாரிப்பு பேனரான பிலிம்ஸ் 24 இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறது.


Click it and Unblock the Notifications











