நாக சைதன்யா – சமந்தா இணைந்து விட்டார்களா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து விட்டார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

நான்கு ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இவர்கள் 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
நாக சைதன்யா - சமந்தா: நட்சத்திர தம்பதிகளாக ஜோலித்த இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இவர்களை இணைவார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது ஏராளமான ரசிகர்கள் நாக சைதன்யாவிடம் மீண்டும் சேர்ந்து விடுங்கள் என்று சமந்தாவுக்கு அறிவுரை கூறினார்கள்.
புகைப்படத்தை நீக்கினார்: மேலும், சமந்தா விஜய் தேவர்கொண்டாவுடனும், நாக சைதன்யா சோபிதா துளிபாலா உடனும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து விவாகரத்தான உடனே சமந்தா நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து சமந்தா நீக்கினார்.

நாக சைதன்யா இன்ஸ்டா பதிவு: இந்நிலையில், நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஆசை ஆசையாக வளர்த்து வந்த ஹாஷ் நாய் குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த உடன் இருவரும் செல்லமாக வளர்த்த செல்ல நாய்க்குட்டி ஹாஷ்யை சமந்தா வளர்த்து வந்தார்.
குழப்பத்தில் பேன்ஸ்: தற்போது நாக சைதன்யா செல்ல பிராணி காரில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வைப் என்று பதிவிட்டதால், இருவரும் இணைந்துவிட்டார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா, ஆசை ஆசையாக வளர்த்து செல்லப்பிராணி ஹாஷ்யை பார்க்க முடியாமல் தவித்து வந்ததை அடுத்து, சமந்தா வளர்த்து வந்த அதே ரக நாயை அதே பெயர் வைத்து நாக சைத்தன்யா வளர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











