Kriti shetty :என்னைவிட யங்கா இருக்காங்க.. க்ரித்தி ஷெட்டி பொறாமைப்பட்ட ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை : நடிகை க்ரித்தி ஷெட்டி சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நாக சைத்தன்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 12ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இரண்டு நாட்களில் இந்தப் படம் வெறுமனே 12 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்திருந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் சொதப்பியுள்ளது.

த்ரிஷாவை பார்த்து பொறாமைப்பட்ட க்ரித்தி ஷெட்டி : நடிகர் நாக சைத்தன்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 12ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது கஸ்டடி படம். மாநாடு படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில், படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியானது. ஆனால் படம் நினைத்த அளவிற்கு இல்லாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. வசூலிலும் சொதப்பியுள்ளது.
கஸ்டடி படத்தின்மூலம் நாக சைத்தன்யா மற்றும் க்ரித்தி ஷெட்டி இருவரும் தமிழில் அறிமுகமாகியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பான அறிமுகத்தை கஸ்டடி படம் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால் படம் அவர்கள் இருவருக்கும் நல்ல என்ட்ரியை கொடுக்கவில்லை. முன்னதாக படத்தின் பிரமோஷனின்போது, வித்தியாசமான கதையை எதிர்பார்த்து படத்தை பார்க்க வராதீங்க என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். ஆனால் நார்மலான ஒரு கதையைக் கூட சுவாரஸ்யமாக கொடுக்கும் அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை க்ரித்தி ஷெட்டி பகிர்ந்துக கொண்டுள்ளார். நாக சைத்தன்யாவுடன் இரண்டாவது படத்தில் இணைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததாகவும், அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கேரியரில் அவர் பல விஷயங்களில் தனக்கு உந்துதலாக இருந்துள்ளதாகவும் க்ரித்தி ஷெட்டி கூறியுள்ளார்.

அதேபோல வெங்கட்பிரபு மிகவும் கூலானவர் என்றும் அவர் படத்தின் கேரக்டர்கள் மிகவும் இயல்பாக அமைய வேண்டும் என்றும் எப்போதும் கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார். அவரோட வேலை செய்யறது எப்போதுமே தனக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்றும் க்ரித்தி ஷெட்டி கூறியுள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர், எளிதாக ஒரு படத்தை விமர்சனம் செய்துவிட்டு போவேன் என்றும் ஆனால் தற்போது அதில் இருந்துக் கொண்டு, ஒரு படத்தை எடுக்க மேற்கொள்ளப்படும் சிரமங்கள் கண்கூடாக தெரிவதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல சினிமாவில் நடிகை த்ரிஷாவின் தீவிர ரசிகை தான் என்று க்ரித்தி ஷெட்டி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வயதிலேயும் தன்னைவிட மிகவும் அழகாகவும் இளமையாகவும் தெரிகிறார் என்றும் க்ரித்தி ஷெட்டி கூறியுள்ளார். க்ரித்தி ஷெட்டிக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. மிகவும் இளம் நாயகியான அவர், த்ரிஷா குறித்து இவ்வாறு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











