Custody - வெங்கட் பிரபு டீமுக்கு 35,000 ரூபாய்க்கு சரக்கு - கஸ்டடியால் நாக சைதன்யாவுக்கு வந்த நிலைமை

சென்னை: Custody (கஸ்டடி) நடிகர் நாக சைதன்யா 35,000 ரூபாய்க்கு வெங்கட் பிரபு டீமுக்கு மது வாங்கி கொடுப்பது போன்ற கஸ்டடி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலில் கஸ்டடி உருவாகியிருக்கிறது நாக சைதன்யாவுக்கு இது முதல் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Custody Movie New Promo video goes viral on Social Media

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வெங்கட் பிரபுவின் ட்ரெய்லரில் எப்போதும் ஜாலியான காட்சிகள் இருக்கும். ஆனால் கஸ்டடி ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளே இருக்கின்றன. எனவே கஸ்டடி படம் வெங்கட் பிரபுவின் புதிய முயற்சியாக முழு ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் எண்ணம் எழுந்திருக்கிறது. படமான நாளை மறுநாள் (மே 12) ரிலீஸாகவுள்ளது.

களைகட்டும் புரோமோஷன்: பட ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருப்பதால் படத்தின் புரோமஷன் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் பல பேட்டிகளை கொடுத்துவருகின்றனர். நேற்று சென்னையில் கஸ்டடி ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடந்தது. அதில் படக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு படம் குறித்தும், வெங்கட் பிரபு குறித்தும் ரகளையாக பேசி சென்றனர்.

Custody Movie New Promo video goes viral on Social Media

முதல் ப்ரோமோ: வெங்கட் பிரபுவின் படத்தின் ப்ரோமோ என்றாலே அது ஜாலியாக வித்தியாசமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். அதை நிரூபிக்கும்விதமாக அண்மையில் ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டது. ஐபிஎல்லை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த அந்த ப்ரோமோவில் நாக சைதன்யா சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும், வெங்கட் பிரபு சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் சப்போர்ட் செய்வது போலவும், இடையில் வரும் பிரேம்ஜி இருவரையும் ஒன்றிணைத்து சென்னை, ஹைதராபாத் எல்லாம் ஒன்னுதான் என கூறுவது போல் இருந்தது. பைலிங்குவலாக படம் உருவாவதால் இந்த ப்ரோமோ வெங்கட் பிரபுவின் ஸ்மார்ட்னெஸ்ஸை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

லேட்டஸ்ட் ப்ரோமோ: இந்நிலையில் புதிய ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அந்த ப்ரோமோவில், சென்னை 600028 படத்தில் நடித்த (மிர்ச்சி சிவாவை தவிர்த்து) அனைவரும் ஆஜராகியிருக்கின்றனர். ப்ரோமோவின் ஆரம்பத்தில் நாக சைதன்யாவை பப்புக்கு பிரேம் ஜி கூப்பிடுகிறார். அதன் பிறகு வைபவ், நிதின் சத்யா, அரவிந்த் உள்ளிட்டோர் பப்புக்கு செல்கின்றனர். அங்கு நாக சைதன்யாவும் இருக்கிறார்.

Custody Movie New Promo video goes viral on Social Media

35,000 பில்: பிறகு இவர்கள் அனைவரும் அவரிடம் வெங்கட் பிரபு பற்றி கேட்பது போலவும், அதற்கு அவர் சரியாக பதில் அளிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு டீமுக்கு 35,000 ரூபாய் நாக சைதன்யா பில்லும் கட்டுகிறார். வெங்கட் பிரபுவின் முதல் அடையாளமாக இருப்பது 600028. அந்தப் படத்தில் நடித்தவர்களை கொண்டு கஸ்டடிக்கு ப்ரோமோ உருவாக்கியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறதென ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து அதை அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X