Custody Trailer: “கோட்டாவுல போலீஸ் வேலைக்கு வந்துட்டு...” ஆக்‌ஷனில் தெறிக்கும் கஸ்டடி ட்ரெய்லர்

சென்னை: மாநாடு, மன்மத லீலை படங்களுக்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார்.

அதேபோல், கஸ்டடி படத்துக்கு இளையராஜா, யுவன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

 Custody trailer: Venkat Prabhu directed Naga Chaitanya starrer Custody film trailer is out now

வெளியானது கஸ்டடி ட்ரெய்லர்:2021 நவம்பரில் வெளியான மாநாடு வெங்கட் பிரபு கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் தான் கம்பேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை ஓடிடி ரசிகர்களுக்கான படமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது கஸ்டடி படத்தில் அதிரடி காட்டவுள்ளார் வெங்கட் பிரபு.

நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள கஸ்டடி, தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. நாக சைதன்யாவுடன் கிருத்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கியமாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Custody trailer: Venkat Prabhu directed Naga Chaitanya starrer Custody film trailer is out now

இந்நிலையில், கஸ்டடி படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ள நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் ட்ரீட் தான் கஸ்டடி படத்தின் கதை என தெரிகிறது.

முக்கியமாக இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அதிக கவனம் ஈர்த்து வருகின்றன. "உன்ன சிஎம் வண்டி பாதுகாப்புக்கு அனுப்புனா, நீ அவங்க வண்டியவே நிறுத்துவியா.? போலீஸ் வேலைன்னா என்னன்னே தெரியாம எதாவது கோட்டாவுல உள்ள வந்துட்டு" என்ற வசனத்தில் வெங்கட் பிரபுவின் அரசியல் டச் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 Custody trailer: Venkat Prabhu directed Naga Chaitanya starrer Custody film trailer is out now

அதேபோல், நாக சைதன்யா - கிருத்தி ஷெட்டி காதல், அரசியல், கேங்ஸ்டர் என பல ஜானர்களில் கஸ்டடி படத்தின் கதை பயணிக்கிறது. மேலும், இது 80 முதல் 90 களில் நடக்கும் பீரியட் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான வெங்கட் பிரபுவின் படமாக கஸ்டடி உருவாகியுள்ளதா அல்லது புதிய கதைக்களத்தில் மாஸ் காட்டுமா என்பதை வரும் 12ம் தேதி தெரிந்துவிடும்.

மே 12ம் தேதி கஸ்டடி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அதன் ட்ரெய்லர் ரிலீஸாகி ஹைப்பை அதிகமாக்கியுள்ளது. சம்மர் விடுமுறை என்பதால் கஸ்டடி திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X