தமிழ் சினிமாவின் இளம்தலைமுறை அப்பாக்கள்!
தமிழ் சினிமாவில் சிவாஜி, பிரபு, விக்ரம்பிரபு என மூன்று தலைமுறையாக நடிக்கும் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.
கமல் - ஸ்ருதி, கார்த்திக்-கௌதம், முரளி - அதர்வா என இரண்டாம் தலைமுறையும் நடிக்க வந்து விட்டனர்.
இன்றைக்கு இளம் தலைமுறை ஹீரோக்கள் பலரும் அப்பாவாகிவிட்டனர். இவர்களின் சீனியர் விஜய், தொடர்ந்து சூர்யா, அஜீத், தனுஷ், கார்த்தி, சிவகார்த்திக்கேயன் என இன்றைய இளம் ஹீரோக்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன்.

விஜய் வாரிசுகள்
விஜய் - சங்கீதா தம்பதியருக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். பையனை மீடியாவிற்கு காண்பிற்கும் அளவிற்கு பெண்குழந்தையின் போட்டோவை வெளியிட்டதே இல்லை.

சூர்யா குடும்பம்
சூர்யா - ஜோதிகா தம்பதியருக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள். எந்த விசேசம் என்றாலும் குடும்பத்தோடுடன் கொண்டாடுவார்கள்.

அஜீத்தின் செல்லமகள்
அஜீத் - ஷாலினி தம்பதியரின் அழகு மகள் அனோஷ்கா. அஜீத் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தனது செல்ல மகளுடன் விளையாடி மகிழ்வாராம்.

தனுஷ் குடும்பம்
தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியரின் மகன்கள் யாத்ரா, லிங்கா தாத்தா ரஜினியின் செல்லங்களாம்.

தேவயானியின் மகள்கள்
தேவயானி - ராஜகுமாரன் தம்பதியரின் குட்டி தேவதைகள் இனியா மற்றும் பிரியங்கா.

குஷ்பு வீட்டு தேவதைகள்
குஷ்பு - சுந்தர்.சி தம்பதியர் வீட்டு தேவதைகள் அவந்திகா, அனந்திகா.

ரம்யாகிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ண வம்சி வீட்டு செல்ல மகன் ரித்விக்.

அடுத்த தலைமுறை ரெடி
இவர்கள் தவிர, நடிகர் அப்பாஸ் வாரிசுகள், நடிகை சிம்ரன் வாரிசுகள் என அடுத்த தலைமுறையினர் ரெடியாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











