எனக்கு எப்பவுமே ‘ஜோ‘தான் பிடிக்கும்..மும்பை ரெஸ்டாரெண்டில் சூர்யா-ஜோதிகா!

மும்பை : மும்பை ரெஸ்டாரன்டில் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் என்ற திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அதே தனது தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் நல்ல கதைகளை தயாரித்து வருகிறார்.

சூர்யா பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தாலும் ஜோவின் கணவராகவும், பொறுப்பான தந்தையாகவும் திகழ்ந்து வருகிறார்.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...என் மீது எப்போது காதல் வந்தது" என்ற பாடல் சூர்யா ஜோதிகா ஜோடியின் காதலுக்காவே எழுதிய பாடலாகவே அமைத்துவிட்டது. 1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் காதல் வயப்பட்ட இந்த ஜோடி இன்று வரை அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகவே இருக்கிறார்கள்

சில்லுனு ஒரு காதல் சூப்பர்

சில்லுனு ஒரு காதல் சூப்பர்

கோலிவுட்டில் இவர்கள் காதல் குறித்து கிசுகிசுக்கப்பட்டாலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சில்லுனு ஒரு காதல் படத்தில் இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார்கள். சூர்யா ஜோதிகா ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஆள்டைம் பேவரைட் திரைப்படமாகும்.

சக்சஸ்ஃபுல் தம்பதிகள்

சக்சஸ்ஃபுல் தம்பதிகள்

இதையடுத்து, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு செப்டம்பர் 11, 2006... தமிழ்சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்த காதல் ஜோடி சூர்யா- ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்தனர். சூர்யா என்ற மூன்றெழுத்தும் ஜோதிகா என்ற மூன்றெழுத்தும் இணைந்து சக்சஸ்ஃபுல் தம்பதிகளாக திகழ்ந்த வருகின்றனர். இந்தத் தம்பதிக்கு 2007-ல் தியா 2010-ல் தேவ் என்ற இரண்டு சுட்டிகள் பிறந்தன.

2டி தயாரிப்பு நிறுவனம்

2டி தயாரிப்பு நிறுவனம்

அதுமட்டும் இல்லாமல், நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக இவர்களது தயாரிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.

‘ஜோ‘வுடன் சூர்யா

‘ஜோ‘வுடன் சூர்யா

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் சூர்யா, ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதற்காக அவர் தனது மனைவியுடன் மும்பை சென்றதாகவும் இந்த படம் குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X