க்யூட்டான நவரச எக்ஸ்பிரஷன்ஸ்..ஜான்வி கபூரை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் !

மும்பை : ஹிந்தி திரைப்படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் ஜான்வி கபூர், தற்பொழுது தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அலா வைகுண்டபுரம்லோ இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக சில நாட்களாக செய்திகள் உலா வருகின்றது.

Recommended Video

காதல் மன்னன் RANBIR KAPOOR | ASHWIN ANALYSE | FILMIBEAT TAMIL

இந்நிலையில் ஜான்வி கபூர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

குன்ஜன் சக்ஸேனா இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்ற மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு முக பாவனைகளில் ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் எவ்வாறு ரசிகர்களை கவர்ந்து வந்தாரோ அதே வழியில் தற்பொழுது ஜான்வி கபூரும் படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்துக் கொண்டு வருகிறார்.

திரைத்துறை பின்புலம்

திரைத்துறை பின்புலம்

2018ம் ஆண்டு வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட ஜான்வி கபூர் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபலமான திரைத்துறை பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் ஜான்வி கபூர் நடித்த முதல் படத்திலிருந்தே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

நம்பிக்கை கூடியது

நம்பிக்கை கூடியது

ஜான்வி கபூரின் தாய் ஸ்ரீதேவி நடிப்பில் சிறந்தவர் விளங்கி இந்திய அளவில் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்ததை தொடர்ந்து தற்போது ஜான்வியும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியிருப்பதால் ஸ்ரீதேவியை போன்று ஜான்வியும் சிறந்த நடிகையாக வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு ஜான்வி மீது மேலும் நம்பிக்கையை கூட்டியுள்ளது.

ஆகஸ்ட் 12 ஓடிடியில்

ஆகஸ்ட் 12 ஓடிடியில்

தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து ஜான்வி நடித்துள்ள குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படம் திரையில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ்

க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும், அதில் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள் இன்னும் ஓரிரு நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் நவரச முகபாவனைகளை வெளிப்படுத்திய புகைப்படம் வைரலாகி உள்ளது.

அழுகின்ற புகைப்படம்

அழுகின்ற புகைப்படம்

க்யூட்டான முகபாவனைகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து அனைவரும் ரசித்து வரும் வேளையில், ஒரு சிலர் நீங்கள் அழுகின்ற புகைப்படத்தையும் இதோடு இணைத்து வெளியிடுங்கள் என கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தங்களது லைக்குளை கொடுத்து இதயங்களை பரிசளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X