ஒடிடிக்கு மாற்றாக ரீகல் டாக்கீஸ்.. விரும்பிய படத்தை பார்க்கலாம் .. தயாரிப்பாளரின் புது முயற்சி !

சென்னை : தயாரிப்பாளர் சி.விகுமார் OTTக்கு மாற்றாக ரீகல் டாக்கீஸ் என்ற புதிய ஆப் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

Recommended Video

OTT ல் கலம் இறங்கும் Raghava Lawrence • Horror Series

தமிழ் திரைத்துறையுலகில் வளரும் இயக்குனர்களின் படங்களை தயாரித்து தனக்கான ஒரு புது ரூட்டை அமைத்துக் கொண்டவர் தயாரிப்பாளர் சி.வி குமார்.

சிறிய படங்களை தயாரித்து அதில் பெரிய அளவில் லாபம் பார்த்து வரும் சி.வி குமார் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் விநியோகஸ்தராகவும் தமிழ் திரையுலகில் இருந்து வருகிறார்.

வளரும் இயக்குனர்களுக்கு

வளரும் இயக்குனர்களுக்கு

தமிழ் சினிமாவில் சிறிய படங்களை தயாரித்தும் வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் பல வெற்றி படங்களை தயாரித்து வரும் சி.வி குமார் அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இவர் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்கள் இவரது தயாரிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

சி.வி குமார்

சி.வி குமார்

இங்கு பலரும் வெற்றி பெற்ற இயக்குநர்கள் வெற்றி பெற்ற நடிகர்கள் என தேடிப்போய் அவரின் படங்களை மட்டும் தயாரித்து வந்த நிலையில் புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் படைப்புகளை உருவாக்கி தற்போது திரைத்துறையில் வெற்றிகரமாக வளர்ந்து கொண்டு வரும் சி.வி குமார் வெறும் தயாரிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இயக்குனராகவும், விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.

அட்டகத்தி

அட்டகத்தி

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் உருவான தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக முதன்முதலில் அட்டகத்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். பா ரஞ்சித் முதன்முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய அட்டகத்தி பல பிரச்சனைகளை சந்தித்து பின் வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்றது.

இயக்குனராக

இயக்குனராக

அட்டகத்தி வெற்றியைத் தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும், காதலும் கடந்து போகும், தெகிடி போன்ற புது புது கதை களங்களைக் கொண்டு வாய்ப்புக்காக தேடி அலைந்த பல இயக்குனர்களின் திரைப்படங்களை தயாரித்து அதில் வெற்றியும் பெற்றார். சி.வி குமார் இயக்கிய முதல் படமான மாயவன் வெளியாகி சராசரியான வெற்றியை பெற்று நல்ல கதைக்காக பாராட்டுகளையும் பெற்றது

அனைவரின் கவனத்தையும்

அனைவரின் கவனத்தையும்

இயக்குனராக மாயவன் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவதாக கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற படத்தையும் இயக்கி இருந்தார். இவ்வாறு தனது தயாரிப்பு படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த சி.வி குமார் மாயவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இவர் புதுமுக இயக்குனர்களின் படங்களை தயாரித்து வந்ததை பார்த்து பலரும் முன்வந்து பல புதிய இயக்குனர்களின் படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் OTT தளங்கள் பிரபலமாகி வருவதையொட்டி சி.வி.குமாரும் இப்போது புதிய திட்டம் ஒன்றை உருவாகியுள்ளார்.

ரீகல் டாக்கீஸ்

ரீகல் டாக்கீஸ்

'தியேட்டர் டூ ஹோம்' என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 'ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் புதிய ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் சிறந்த கதைக்களத்தை கொண்டவர்களுக்கும், தங்களது தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட முடியாமல் தவித்து வரும் படைப்பாளிகளுக்கும் இது மிகப்பெரிய நுழைவாயிலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

விரைவில் அறிமுகமாக

விரைவில் அறிமுகமாக

நேரடி திரைப்படங்கள் முலம் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும், இயக்குனர்களுக்கும் சரியான வாய்ப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 'ரீகல் டாக்கீஸ்' ஆப் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதில் படங்களை காண ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக கட்டி காணலாம். மேலும் இதை பற்றி ஜூலை மாதத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: cv kumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X