வடிவேலுவின் அடுத்த படம் டிடெக்டிவ் நேசமணியா? சூது கவ்வும் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்டை பாருங்க!

சென்னை: சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வரும் நடிகர் வடிவேலு அந்த பிரச்சனைகளை தாண்டி மீண்டும் எப்போது சினிமாவில் நடிப்பார் என்கிற ஆவலில் ஏகப்பட்ட ரசிகர்களும் முக்கியமாக மீம் க்ரியேட்டர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு டிடெக்டிவ் நேசமணி படத்தில் நடிக்கப் போவதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் ஷேர் செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சிவி குமாரின் அந்த ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட வடிவேலு ரசிகர்கள் செய்து வரும் அட்டகாசமான கமெண்ட்டுகளும் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

காமெடி கிங்

காமெடி கிங்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் மிகப்பெரிய இடத்தை தனக்காக உருவாக்கி வைத்திருக்கும் காமெடி கிங் தான் நம்ம வைகைப்புயல் வடிவேலு. கவுண்டமணி செந்தில் போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில் சினிமா உலகில் கால்பதித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் வடிவேலு.

டைமிங் காமெடி

டைமிங் காமெடி

டைமிங்ல ரைமிங்கா பேசி காமெடி பண்றது மட்டுமல்ல, வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட பல சித்து வேலைகளை காமெடிகளிலும் கொண்டு வர முடியும் என நிரூபித்து காட்டியவர் நடிகர் வடிவேலு.

கால்ஷீட் கிடைக்காமல்

கால்ஷீட் கிடைக்காமல்

வடிவேலுவின் கால்ஷீட்டுக்காக பல சூப்பர்ஸ்டார்களின் படங்கள் காத்துக் கிடந்த காலத்தை எல்லாம் தமிழ் சினிமா எப்போதுமே மறக்காது. அந்த அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் பிசியாக இருந்த வடிவேலு, இன்று அடுத்த படம் எப்போது என்பதே தெரியாமல் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார்.

ஷங்கருடன் பிரச்சனை

ஷங்கருடன் பிரச்சனை

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி எனும் பார்ட் 2 படத்தை நடிகர் வடிவேலுவை வைத்து உருவாக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு, படத்தின் ஷூட்டிங் பணிகளும் தொடங்கின. ஆனால், நடிகர் வடிவேலு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பேச்சை கேட்காமல் தன் இஷ்டத்துக்கு நடந்து கொண்டதாகவும் படப்பிடிப்பு தளத்திற்கு வராமல் பிரச்சனை பண்ணதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், அந்த படம் அப்படியே டிராப் ஆனது. அதில் இருந்து நடிகர் வடிவேலு இன்னமும் புதிய படத்தில் நடிக்க முடியவில்லை.

பேய் மாமா

பேய் மாமா

அதன் பிறகும் நடிகர் வடிவேலு பேய் மாமா எனும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அந்த படத்திலிருந்தும் நடிகர் வடிவேலு வெளியேறினார். பின்னர், அந்த படத்தில் யோகி பாபு நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த படமும் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இயக்குநர் ராம்பாலா

இயக்குநர் ராம்பாலா

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என சந்தானத்தை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் ராம் பாலா அடுத்ததாக காமெடி நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படத்தை இயக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னமும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

குல தெய்வம்

குல தெய்வம்

வடிவேலு சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், தினமும் வடிவேலு மீம்ஸ் பார்க்காமல் தமிழ் ரசிகர்களின் வாழ்நாள் நகர்வதில்லை என்றே கூறுகின்றனர். மீம் க்ரியேட்டர்களின் குல தெய்வமாகவே வடிவேலு மாறிவிட்டார் என்பது வேறு கதை.

நேசமணி டிரெண்டிங்

நேசமணி டிரெண்டிங்

நேசமணிக்கு என்ன ஆச்சு என பிரெண்ட்ஸ் படத்தில் சுத்தியல் தலையில் விழுந்த காட்சியை போட்டு ஹாஷ்டேக் நேசமணியை உலகளவில் டிரெண்டிங் செய்து வடிவேலு ரசிகர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க பெரிய பாதையை வகுத்தனர்.

டிடெக்டிவ் நேசமணி

டிடெக்டிவ் நேசமணி

இந்நிலையில், இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில் சிவி குமார் தயாரிப்பில் டிடெக்டிவ் நேசமணி எனும் படம் உருவாகி விட்டது என்றும், அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் விரைவில் அந்த படம் வெளியாகிறது என்றும் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவி குமார் ட்வீட்

சிவி குமார் ட்வீட்

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த சூது கவ்வும் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சிவி குமார், "Fake news uhh இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா... ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா" என ட்வீட் போட்டு அது உண்மையான செய்தி அல்ல ஃபேக் நியூஸ் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உண்மை ஆக்கிடுங்க

உண்மை ஆக்கிடுங்க

தயாரிப்பாளர் சிவி குமாரின் அந்த ட்வீட்டுக்கு கிழே ஏகப்பட்ட வடிவேலு ரசிகர்கள், சார் அந்த வதந்தியை உண்மை ஆக்கிடுங்க.. சீக்கிரம் தலைவன் படத்தை பார்க்கணும்.. தயவு செஞ்சு எங்களுக்காக ஒரு புதிய படத்தை அவரை வச்சு தயாரிங்க என ஏகப்பட்ட கோரிக்கை கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ஃபேன் மேட்

ஃபேன் மேட்

பிரபு எனும் ரசிகர் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர் தான் அது என்பதும் தெரியவந்திருக்கிறது. சிவி குமார் ட்வீட்டுக்கு கீழே என் ஃபேன் மேடை நீங்க ஷேர் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல என நன்றி கூறியுள்ளார். நீதானப்பா அது என அவரை டேக் செய்து சிவி குமாரும் ரிப்ளை பண்ணி உள்ளார். சீக்கிரமே வைகைப் புயலின் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானால் ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X