சிவி.குமார் ட்விட்டரில் கருத்து கேட்பு.. சூது கவ்வும் பார்ட்2.. ரசிகர்கள் ஆர்வம்
சென்னை : சூது கவ்வும் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சிவி.குமார் தயாரிப்பு நிறுவனமான திருகுமரன் எண்டர்பிரைஸ் நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவின் திருப்புமுனை படங்கள் என்று சொல்ல கூடிய பல படங்களை தயாரித்திருக்கிறார். பல திறமை மிகுந்த இளம் இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு தந்த பெருமை இவருக்கு உண்டு.

அட்டகத்தி, பீட்சாவில் துவங்கி தெகிடி, இன்று நேற்று நாளை என தமிழ் சினிமாவின் ரேஞ்சையே மாற்றியவர் சிவி.குமார்.
தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்தும் அது வர்த்தக ரீதியாக தோல்விகளை சந்திந்தன. சிவி.குமார் இயக்கிய இரு படங்களும் நல்ல ஓபனிங் இன்றி வெற்றி பெற திணறியது. இதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது இரு படங்களை தயாரித்து வருகிறார் சிவி.குமார்.

ஜிவி.பிரகாஷின் 4ஜி மற்றும் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படத்தையும் தற்போது தயாரித்துள்ளார். இந்த டைட்டானிக் காதலும் கவுந்துபோகும் படத்தின் இசை வெளியீட்டின் போதுதான் சிவி.குமார் தான் கடந்து வந்த பாதைகளை மக்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நடந்தது.
இதனையடுத்து தயாரிப்பாளர் சிவி.குமார் தனது அடுத்தடுத்த தேடல்களை துவங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது. ட்விட்டரில் திருகுமரன் எண்டர்பிரைஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் சிவி.குமார் முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். அதில் உங்களுக்கு எந்த படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்காக சூதுகவ்வும் ,தெகிடி மற்றும் மாயவன் ஆகிய மூன்று படங்களின் பெயரையும் பட்டியலிட்டுள்ளார்.

இதில் அதிகபடியான ரசிகர்கள் சூதுகவ்வும் படத்தையே தேர்வு செய்துள்ளனர். சிவி.குமார் தயாரித்ததிலே பெரிய லாபம் ஈட்டிய படமும் இது தான். நலன் குமாரசாமி இயக்கிய இந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதற்கு முன்பு வரை டார்க் காமெடிகள் எதுவும் தமிழில் பெரிய வெற்றி காணாத நிலையில் முழுக்க முழுக்க டார்க் காமெடியில் ஒரு படத்தை எடுத்து வெற்றி கண்டவர். இந்த படத்திற்கு பின்பு தான் தமிழ் சினிமாவில் அதிக படியாக டார்க் காமெடி திரைப்படங்கள் வெளியாகின .
காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நலன் குமாரசாமியும் எந்த படத்தையும் இயக்க வில்லை மாயவன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்களின் எழுத்தில் மட்டும் பணியாற்றியிருந்தார். இதனால் கிடைத்த நேரத்தில் நலன் குமாரசாமி சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் கதையை எழுதி கூட இருக்கலாம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications











