மகளின் வீடியோவை வெளியிட்ட குக் வித் கோமாளி கனி...அதுவும் என்ன வீடியோனு பாருங்க

சென்னை : டைரக்டர் அகத்தியனின் மகள்களில் ஒருவரான கனி என்ற கார்த்திகா, குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றார். அதில் டைட்டிலையும் வென்று பலரின் மனம் கவர்ந்த கனி அக்கா ஆனார்.

இந்த நிகழ்ச்சியில் கனி வைக்கும் காரக் குழம்பு ரொம்ப ஃபேமஸ். குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி போட்டிக்கு நடுவராக சென்ற சிம்பு கூட சமீபத்தில் கனி வீட்டிற்கு நேராக சென்று காரக் குழம்பை சுவைத்து ஆஹா...ஓஹோ என பாராட்டி உள்ளார்.

பிக்பாஸ் போட்டியில் நானா

பிக்பாஸ் போட்டியில் நானா

இவர் சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டுமல்ல, சமையலுக்கென்று தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Recommended Video

SUPER SINGER Maanasi VS Iyenar | Setல என்ன Torchal பண்ணுவாரு
அது உண்மையில்லை

அது உண்மையில்லை

ஆனால் இது உண்மையில்லை. தன்னிடம் யாரும் அது பற்றி பேசவில்லை என பலமுறை கனி விளக்கம் அளித்த பிறகும் ரசிகர்கள் பலர் இதே கேள்வியை கேட்டு வருகின்றனர். இது பற்றி விளக்கமும் அளித்து விட்டார் கனி. இதே போன்று கனி சினிமாவில் நடிக்க போவதாகவும் தகவல் ஒன்று பரவியது.

இது தான் கஷ்டமான வேலை

இது தான் கஷ்டமான வேலை

புகழ்பெற்ற டைரக்டரான திருவை திருமணம் செய்து கொண்டுள்ள கனிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மூத்த மகள், நீண்டு வளர்ந்திருக்கும் தனது கூந்தலை காட்டும் புதிய வீடியோவை கனி வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் எழுதி உள்ள கேப்ஷனில், பொண்ண வளக்கறத விட கஷ்டம் அந்த பொண்ணோட தலைமுடிய வளக்கறது தான் என குறிப்பிட்டுள்ளார்.

குவியும் லைக்குகள்

இந்த வீடியோவை இதுவரை 72,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ மற்றும், கனியின் கேப்ஷனை பாராட்டி பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். தலைமுடியை ஆட்டியபடி க்யூட்டாக கனியின் மகள் செய்யும் செயல்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X