விஜய்யுடன் ஜாலி க்ளிக்...செம டிரெண்டாகும் சிவாங்கி வெளியிட்ட பீஸ்ட் BTS போட்டோ

சென்னை : பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை குக் வித் கோமாளி சிவங்கி வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ செம டிரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இதை செம குஷியாக கொண்டாடி வருகிறார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசானது. இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் பீஸ்ட், பான் இந்தியன் படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வித்தியாசமான நெல்சன் படம்

வித்தியாசமான நெல்சன் படம்

வழக்கமான நெல்சன் படங்களை போல் இல்லாமல் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சற்று கூடுதலாகவே அமைக்கப்பட்டிருந்தன. இந்த படத்தில் வீர ராகவன் என்ற ரா ஏஜன்ட் ரோலில் விஜய் நடித்திருந்தார். பீஸ்ட் படத்திற்காக அனிருத் இசையமைத்த அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே செம ஹிட்டாகி விட்டன.

ரசிகர்கள் கொண்டாடும் பீஸ்ட்

ரசிகர்கள் கொண்டாடும் பீஸ்ட்

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. ரிலீசான இரண்டு வாரங்களில் இந்த படம் 250 கோடி வசூலை எட்டி உள்ளது. காமெடி, ஆக்ஷன், ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் என ஆக்ஷன் த்ரில்லிங் கலந்த காமெடி படமாக அமைக்கப்பட்டுள்ளதால் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக பீஸ்ட் மாறி உள்ளது.

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்

சக்சஸ் பார்ட்டி கொடுத்த விஜய்

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜய், பீஸ்ட் படக்குழுவினரை நேற்று தனது வீட்டிற்கு அழைத்து சக்சஸ் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த போட்டோவை டைரக்டர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, விஜய்க்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த போட்டோ நேற்று செம வைரலானது. இந்த போட்டோவை படக்குழுவை சேர்ந்த பலரும் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

சிவாங்கி பகிர்ந்த பிடிஎஸ் போட்டோ

சிவாங்கி பகிர்ந்த பிடிஎஸ் போட்டோ

நெல்சன் நேற்று பகிர்ந்த போட்டோ வைரலானதால் இன்று பலரும் இதுவரை வெளி வராத பீஸ்ட் BTS போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அபர்ணா தாசும் இது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டிருந்தார். அப்படி குக் வித் கோமாளி சிவாங்கியும் இன்று, பீஸ்ட் செட்டில் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது ஜாலியோ ஜிம்கானா பாடல் ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாம்.

 எப்படி கொண்டாடிருக்காங்க பாருங்க

எப்படி கொண்டாடிருக்காங்க பாருங்க

இந்த போட்டோவுடன் சிவாங்கி, அன்பான வார்த்தைகள் சொன்ன தளபதி. சிவகார்த்திகேயன் அண்ணா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சிவாங்கி பகிர்ந்த மற்றொரு போட்டோவில் டான் படத்தின் டைரக்டர் சிபி சக்கரவர்த்தியும் உள்ளார். சிவாங்கி பகிர்ந்த இந்த போட்டோக்களும் செம வைரலாகி வருகின்றன. இதை கொண்டாட விஜய் ரசிகர்கள், #Sivaangi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X