கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் மீரா மிதுன்.. ஆண் நண்பரையும் அலேக்காக தூக்கிய போலீஸ்!
சென்னை: மீரா மிதுனை தொடர்ந்து அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்றும் சினிமாவில் இருக்கும் பட்டியலின நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவரையும் வெளியேற்றினால் தான் நல்லா இருக்கும் என்றும் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் பேட்டி அளித்த மீரா மிதுன் சர்ச்சையில் சிக்கினார்.
நடிகை மீரா மிதுனின் இந்த அவதூறு பேச்சுக்கு எதிராக புகார்கள் குவியவே அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரைகுறை ஆடை
அரை நிர்வாணமாகவும் அரை குறை ஆடைகளிலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தார் மீரா மிதுன். சர்ச்சை நாயகியாக வலம் வந்த அவரை பிக் பாஸ் நிகழ்ச்சி இங்கே வாங்க இது உங்களுக்கான இடம் என அழைக்க அங்கே போயும் ஏழரை கூட்டினார்.

காப்பி அடிக்கிறாங்க
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வந்த மீரா மிதுன் சில நடிகைகள் தன்னை பார்த்து காப்பி அடிக்கிறாங்க என்றும் தான் தான் சூப்பர் மாடல் என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வந்தனர். பல யூடியூப் வீடியோக்களும் மீரா மிதுனின் வீடியோக்களையும் ட்ரோல்களையும் வெளியிட்டே பிரபலமாகின.

காந்தி, நேரு
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என ஏகப்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், தன்னை கைது செய்வது என்பது கனவில் கூட நடக்காது என்றும், காந்தி மற்றும் நேரு சிறைக்கு செல்லவில்லையா? நான் ஜெயிலுக்கு போகவும் கவலைப்பட மாட்டேன் என்று பேசி வந்த நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒத்துழைக்க மறுக்கிறார்
தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கூச்சலிட்டு வரும் மீரா மிதுன் தனது வழக்கறிஞர் வரும் வரை தான் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க மாட்டேன் என அடம்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆண் நண்பர் கைது
மீரா மிதுன் பேசிய வீடியோவில் அவருடன் இருந்த ஆண் நண்பர் அபிஷேக்கை போலீசார் எப்போது கைது செய்வார்கள்? அவர் எங்கே சென்று விட்டார் என்கிற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











