twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்க சச்சின் தோனி சன்னி லியோன் ரசிகரா… அப்படின்னா கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க

    |

    சென்னை: ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்கள் பற்றிய விபரங்களை இணையதளங்களில் தேடும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சைஃபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ரசிகர்கள் தங்களின் பிரியமான ஸ்டார் பற்றின ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால், இது போன்ற தீங்கு விளைவிக்கும் இணையதளத்தினுள் சிக்கி கொள்கிறார்கள்.

    அதனால் அவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைஃபர் க்ரைம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Cyber Crime Police Warned Fans

    இணையத்தளத்தில் நாம் நமது பிரியமான பிரபலங்களை பற்றின லேட்டஸ்ட் செய்திகளை தேடுவது வழக்கம். அதிலும் தங்களின் ஸ்மார்ட் ஃபோன்களிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ ஏதாவது கிளுகிளுப்பான போட்டோக்களோ அல்லது விளம்பரம் தொடர்பான லிங்க்குகள் முதல் தடவை வந்தால் கொஞ்சம் சபலப்பட்டாலும், அதை வேண்டாம் என்று மறுத்துவிடுவதுண்டு.

    அதே விளம்பரமோ போட்டோவோ தொடர்ந்து வந்து விழுந்துகொண்டே இருந்தால், வேறு வழியில்லாமல், சரி நாம் அந்த இணையதளத்தில் என்னதான் இருக்கும் என்று போய் தான் பார்ப்போமே என்று ஜொல்லுவிட்டுக்கொண்டு போய் பார்த்தால் அதோ கதிதான்.

    அந்த மாதிரியான இணையதளங்களில் பெரும்பாலானவை நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களையும், கம்ப்யூட்டர்களையும் நாசமாக்கிவிடும். அல்லது நம்முடைய எதிர்காலத்தை நாசமாக்கிவிடும்.

    இன்னும் சில போலியான லிங்க்குகள் நம்மை தவறான, தீங்கு விளைவிக்கும் வலைதளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடும். இதனால் நமக்கு சட்டபூர்வ சிக்கல்களும் எழக்கூடும். அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

    Cyber Crime Police Warned Fans

    பிரபலங்களின் தேடல்களில் முதல் இடத்தை பிடித்தவர் மஹேந்திர சிங் தோனி. இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், அவரை தொடர்ந்து சன்னி லியோன், ஷ்ரத்தா தாஸ், பி.வி.சிந்து, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் அந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள்.

    சைபர் கிரைம் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், ரசிகர்கள் தங்களின் பிரியமான ஸ்டார் பற்றின ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால், இது போன்ற தீங்கு விளைவிக்கும் இணையதளத்தினுள் சிக்கி கொள்கிறார்கள்.

    அதனால் அவர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைஃபர் க்ரைம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரபலங்களை ஆயுதமாக பயன்படுத்தி இது போன்ற தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இருப்பினும் நாமும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

    எனவே சமூக வலைதளங்களில் எந்நேரமும் சிக்கி கொண்டிருக்கும் ஆசாமிகளே சற்று உஷாராக இருங்கள்.

    English summary
    Cyber Crime Police have warned fans to be cautious when searching websites for details of their favorites.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X