வெள்ள பாதிப்பு.. பசியால் தவித்த மக்கள்..ஓடி வந்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்.. குவியும் பாராட்டு!
சென்னை: வெள்ளத்தில் பசியால் தவித்த மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஓடி வந்து உதவி உள்ளனர்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம்,போரூர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
மிக்ஜாம் புயல்: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இதனால், வட தமிழக கடற்கரையை நோக்கி நகர துவங்கிய இந்த புயலால் டிசம்பர் 4ந் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்துவிட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மோசமான சாலை: அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மூழ்கி, 5 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், பல்லாவரம் மற்றும் குன்றத்தூர் சாலையில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான பெய்த மழையால் சாலை படுமோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.

மொட்டை மாடியில் தஞ்சம்: பெரும்பாலான ஆறுகள் நிரம்பிவிட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மார்பளவு தண்ணீர் இருந்ததால், பலர் முதல் தளத்திலும் மொட்டை மாடியிலும் தஞ்சம் அடைந்தனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் மீட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 50 மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுளளனர்.

உதவிய விஜய் மக்கள் இயக்கம்: பெரும்பாலான பகுதிகளில் இன்னும்மழை நீர் வடியாததால், பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், வீட்டிற்குள்ளேயே பசி, பட்டினியோடு முடங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் படகில் வீடு தேடி சென்று உதவி செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Click it and Unblock the Notifications