D 50 First Look: தனுஷின் D 50 ஃபர்ஸ்ட் லுக்... மிரட்டலான போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்

சென்னை: தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சைலண்டாக உருவான டி 50 படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷின் மிரட்டலான போஸ்டருடன் வெளியான இந்த அப்டேட் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

மிரட்டலான லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவான தனுஷ், பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோருடன் தனுஷும் இந்தப் படத்தில் கேமியோவாக நடித்திருந்தார். பவர் பாண்டி படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் D 50. இது தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 D 50 First Look: Dhanushs D 50 First Look To Release On 19th February

பவர் பாண்டி ஃபீல்குட் மூவியாக வெளியான நிலையில், D 50 கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷின் முரட்டு சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர்.

இதுவரை D 50 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக மட்டுமே அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதுதவிர வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் முதல் அப்டேட்டாக D 50 ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகிறது. அதன்படி நாளை (பிப்.19) தனுஷின் D 50 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளது.

இதனுடன் தனுஷின் மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மொட்டை தலையில் கொஞ்சம் முடி வளர்ந்த லுக்கில் நிற்கும் தனுஷின் முதுகில் ரத்தம் வடிவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் போஸ்டரிலேயே ரத்தம் தெறிக்க தெறிக்க மிரட்டியுள்ளார் தனுஷ். இதனால் படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் சம்பவங்கள் தான் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே D 50 படம் ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. மேலும் இப்படத்திற்கு ராயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் D 50 ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இதுபற்றியும் விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X