காதலியை கரம் பிடிக்கும் எருமை சாணி விஜய்... கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!

சென்னை : யூடியூப் சேனல் மூலம் பிரபலமான எருமை சாணி விஜய்க்கும் அவருடைய காதலிக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய.

இவரின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்புக்கு என்றே தனிரசிகர்கள் இருக்கிறார்கள்.

D Block director eruma saani vijay and nakshatra engagement

ஏராளமான பெண் ரசிகர்கள் : எருமை சாணி என்ற யூடியூப் சேனலில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் லாக் டவுன் பற்றி விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோக்கள் அனைத்தும் பாலோவர்களை அள்ளியது.

சினிமாவில் அறிமுகம் : யூடியூப் சேனலில் கலக்கி வந்த எருமை சாணி விஜய், ஹிப் பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்திருந்தார். சினிமாவில் நுழைந்த எருமை சாணிக்கு விஜய் படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்ற இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

டி பிளாக் படத்தை இயக்கினார் : இந்தாண்டு வெளியான டி பிளாக் படத்தை எழுதி இயக்கி இருந்தார் விஜய். இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்து இருந்தார். டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அருள் நிதியின் நண்பராக எருமை சாணி விஜய்யும் சேர்ந்து நடித்து இருந்தார்.

D Block director eruma saani vijay and nakshatra engagement

நிச்சயதார்த்தம் : இந்நிலையில் எருமை சாணி விஜய் தனது நீண்ட நாள் காதலி நக்ஷத்திரா கரம்பிடிக்க உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த விழா மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த புகைப்படதை விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவரும் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருப்பதாக கூறி அழகான கவிதையுடன் ஒருரொமான்டிக் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாள் காதல் : விஜய் மட்டுமில்லை நட்சத்திராவும் மீடியாவில் தான் இருக்கிறார். மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர் என பலமுகங்களை கொண்டவர் நட்சத்திரா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிட்டுவந்த நிலையில், பெற்றோர் முன்னிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X