வாவ்.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. அந்த மனசு தான் சார் கடவுள்.. தலைவணங்குகிறோம் இசையமைப்பாளரே!

நொச்சிப்பட்டி திருமூர்த்தியை தனது இசையில் பாட வைத்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான்.

Recommended Video

D.Imman given chance to PlayBack singer Thirumoorthy : சொன்னதை செய்து காட்டிய இமான்

சென்னை: 'கண்ணான கண்ணே' வைரல் பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை தனது இசையில் பாட வைத்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான்.

சில நாட்களுக்கு முன்பு பெரும்பாலான தமிழக மக்களின் மொபைல்களில் ஒலித்தக் குரல் நொச்சிப்பட்டி திருமூர்த்தியினுடையது. விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை கண்பார்வையற்ற திருமூர்த்தி பாடும்போது, கண்களில் கண்ணீரும், நெஞ்சத்தில் நெகிழ்ச்சியும் ஒருசேர பொங்கியது.

D.Iman introduces Nochipatti Thirumorrthy as singer

'ச்சே இவ்வளவு அற்புதமான குரலை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் உட்கார்ந்திருக்கும் இந்த இளைஞன் யார்' என்ற கேள்வி அனைவரையும் ஆட்டிப்படைத்தது. அந்த கேள்விக்கான விடையை இமானே கண்டுப்பிடித்து சொன்னார். ஆம் தனது காந்தக்குரலால் பலரையும் ஈர்த்த திருமூர்த்தி, இமானையும் இம்ப்ரஸ் செய்துவிட்டார். உடனே தனது உதவியாளர்கள் மூலம் திருமூர்த்தியை தேடிப்பிடித்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பிள்ளை சிறப்பு நிகழ்ச்சியின் போது, திருமூர்த்தியை பாடகராக அறிமுகப்படுத்த போவதாக அறிவித்தார் இமான். சொன்னதை செய்தும் காட்டிவிட்டார்.

ரத்தினசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு படத்தில் தனது இசையில் திருமூர்த்தியை பாட வைத்துள்ளார் இமான். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். பார்வதியின் வரிகளில் ஒரு ஆத்மார்த்தமான பாடலாக இது இருக்கும் என இமான் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்த, அதுவும் கண்பார்வையற்ற மாற்றுதிறனாளியான திருமூர்த்தி இன்று சினிமா பாடகர். இமானின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

சினிமாவில் பாட ஒரு வாய்ப்புக்கிடைக்காதா என ஏங்கி தவிக்கும் லட்சக்கணக்கான குரல்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் டி.இமான். வாழ்வில் ஜெயிக்க திறமை தான் முக்கியம் என நிரூபித்திருக்கிறார் நொச்சிப்பட்டி திருமூர்த்தி.

இமானுக்கும், திருமூர்த்திக்கும் எங்கள் சார்பில் ஆயிரம் முத்தங்கள்.. இருவரின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அந்த பாடலை கேட்க நாங்களும் ஆர்வமாய் தான் இருக்கிறோம். சீக்கிரம் ரிலீஸ் செய்ங்க ப்ரோ.

More from Filmibeat

Read more about: iman இமான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X