இணையத்தில் தீயாக பரவும் இமான் மனைவியின் வீடியோ.. 2 பேரும் எப்படி ஜாலியா இருந்திருக்காங்க பாருங்க!

சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் தனது முதல் மனைவி மோனிகாவுடன் செம ஜாலியாக இருந்த த்ரோபேக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

பஞ்சுமிட்டாய் படத்திற்காக அவர் இசையமைத்த பாடலை தனது மனைவியுடன் சேர்ந்து வீடியோ மூலம் சந்தோஷமாக ஷேர் செய்யும் பழைய வீடியோவை தற்போது பகிர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை திட்டி வருகின்றனர்.

D Imman and his first wife Monika throwback video trending in social media

கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரலில் மோனிகாவை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இமான் 2020 நவம்பர் மாதம் விவாகரத்து செய்துக் கொண்டார்.

இசையமைப்பாளர் டி. இமான்: விஜய்யின் தமிழன் படத்தில் ஆரம்பித்து அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் மனங்கொத்தி பறவை படத்திற்கு இசையமைக்கத் தொடங்கிய இமான் சிவகார்த்திகேயனை தனது தம்பியாகவே நினைத்து பல ஆண்டுகள் குடும்ப நண்பர்களாகவே இருவரும் வாழ்ந்து வந்தனர்.

மன்னிக்கவே மாட்டேன்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனை பாடகராகவும் அறிமுகப்படுத்திய இமான் தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என கடைசி வரை நல்ல ஹிட்டான ஆல்பங்களை தான் சிவகார்த்திகேயனுக்கு வழங்கி வந்தார். ஆனால், திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என அளித்த பேட்டி விவகாரமாக சென்று சிவகார்த்திகேயன் தான் இமான் - மோனிகா பிரியவே காரணம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

மை பியூட்டிஃபுல் வைஃப்: இந்நிலையில், டி. இமான் மற்றும் அவரது முதல் மனைவி மோனிகா இருவரும் இணைந்து கொண்டு செம ஹேப்பியாக பஞ்சுமிட்டாய் படத்திற்காக உருவாக்கிய மை பியூட்டிஃபுல் வைஃப் பாடலை பாடி தனது மனைவி மோனிகாவுக்கு டெடிகேட் செய்யும் வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இப்படி ஹேப்பியா இருந்த லைஃப் விவாகரத்து ஆகி பிரிய என்ன காரணம் என்றும் கேட்டு வருகின்றனர். இமான் முதல் மனைவியை பிரிந்த நிலையில், இரண்டாவதாக அமெலியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X