இந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் இனிமே இமான் தான் அப்பா.. அவர் மனைவி என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் என்பவரை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவதாக எமிலி என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இரக்க குணம் அதிகம் கொண்ட இமான் ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் தொண்டுகளையும் செய்து வருகிறார்.
தொடர்ந்து தொண்டு செய்வதற்கு டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்துள்ள டி. இமான் அதன் ஆரம்பகட்டமாக பார்வையற்ற தம்பதிகள் இருவருக்கு வீடு எடுத்து கொடுத்து அவர்களின் பார்வையுள்ள இரு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஏற்றுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக உதவி வருகிறார்.

பார்வையற்ற தம்பதியினரின் 2வது பெண் குழந்தையான நிரலியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தம்பதியினரை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் கேக் கட் செய்து கொண்டாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
4 பேரை தத்தெடுத்த இமான்: இசையமைப்பாளர் டி. இமான் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரஜினிகாந்த், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சில மாதங்கள் முடங்கியிருந்த இமான் தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பார்வையற்ற தம்பதியினரையும் அவரது இரு பெண் குழந்தைகளையும் இமான் மற்றும் அவரது 2வது மனைவி எமிலி தத்தெடுத்துள்ளனர்.
வாழ்க்கையில் பட்ட அடி: தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் இவர்களுக்கு உதவ வேண்டும் என நீங்கள் நினைக்க என்ன காரணம் என்கிற கேள்விக்கு பதிலளித்த டி. இமான் "வாழ்க்கையில் பட்ட அடிதான் காரணம்" என்றார். முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தது அவரை மனதளவில் ரொம்பவே பாதித்து விட்டது. அதிலிருந்து மீண்டு வர இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட இமான் தற்போது பல்வேறு விஷயங்களையும் உதவிகளையும் செய்து வருகிறார்.
குழந்தைகளுக்கு பார்வை இருக்கு: பாலு மற்றும் அவரது மனைவி ஷீபா இருவருக்குமே பார்வையில்லை. அவர்கள் முதலில் அறிமுகமானார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பார்வை இருக்கிறது எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அறிந்த உடனே சந்தோஷப்பட்டேன். அந்த பெண் குழந்தையை அவர்கள் எப்படி வளர்ப்பார்கள் என்கிற யோசனை வந்த நிலையில் தான் அவர்களை பராமரிக்க நினைத்தேன் என்றார். 2வதாக பிறந்த குழந்தைக்கும் பார்வை உள்ளது இறைவன் செய்த செயல். இந்த இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள பேபி சிட்டர். அவர்களின் படிப்புக்கான தேவை என அனைத்தையும் என்னால் முடியும் அளவுக்கு செய்து வருகிறேன் என்றார். இருவரும் கைகூப்பி எங்களுக்கும் இனிமே அவர் தான் தந்தை என்றனர்.
மனைவி ரொம்ப ஹேப்பி: இமான் எப்போதுமே அடுத்தவரின் ஷூ முதல் அனைத்தையும் செக் செய்வார். தன்னுடன் இருப்பவர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் உடனே கேட்டு உதவி செய்யும் குணமுடையவர். இப்படியொருவரை காண்பது அரிது என்றும் இந்த இரண்டு குழந்தைகளையும் ஆரம்பத்தில் இருந்தே அவர் சொந்த குழந்தைகளை போலவே பார்த்து வருகிறார். அவர்களை நேரில் சந்திக்க வேண்டும், இரண்டாவது குழந்தையின் பிறந்தநாளை அவர்களுடன் கொண்டாட வேண்டும் என 2 வாரங்களாக நாங்கள் பிளான் செய்து வந்திருக்கிறோம் என்றார். டி. இமான் மற்றும் அவரது மனைவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











