D Imman: பார்த்திபனுக்கு டி இமான் கொடுத்த சர்ப்ரைஸ்... ட்ரெண்டாகும் இன்ஸ்டா போஸ்ட்!

சென்னை: பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இரவின் நிழல் வரிசையில் வித்தியாசமாக உருவாகும் இந்தப் படத்தின் பாடல் குறித்து டி இமான் அப்டேட் கொடுத்துள்ளார்.

டி இமான் கொடுத்த சர்ப்ரைஸ்: பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவான இரவின் நிழல் படத்துக்கு AR ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனால் இந்தப் படம் கேன்ஸ் முதல் பல சர்வதேச திரைப்பட விழா வரை இரவின் நிழல் திரையிடப்பட்டது. இதனையடுத்து பார்த்திபன் இயக்கும் படத்துக்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

 D Imman: D Imman gave the first single update of Parthibans new film

முன்னதாக இந்தப் படத்துக்கும் ஏஆர் ரஹ்மானிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் பார்த்திபன். ஆனால் அவரால் முடியாமல் போனதால் டி இமானிடம் சென்றார். இதனையடுத்து பார்த்திபன் - டி இமான் கூட்டணியில் உருவாகும் படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் டி இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி குரலில் கேரக்டர் அறிமுகப் பாடல் முடிந்துவிட்டது எனவும், இந்தப் பாடலை பார்த்திபன் எழுதியுள்ளதாக டி இமான் அறிவித்துள்ளார். அப்போது பார்த்திபன், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி, கீர்த்தனா பார்த்திபன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இதனால் பார்த்திபன் - டி இமான் கூட்டணியில் உருவான பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 D Imman: D Imman gave the first single update of Parthibans new film

முன்னதாக சிவகார்த்திகேயன் குறித்து டி இமான் பேசியது கடும் சர்ச்சையானது. அதாவது சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால் இனி அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் எனவும் பேட்டியில் கூறியிருந்தார். டி இமானின் இந்த பேட்டி திரையுலகையே அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X