சிவகார்த்திகேயனுக்கு டாட்டா.. இனிமேல் சந்தானத்துக்குத்தான் பாட்டு.. டி. இமான் இப்படி குலுக்குறாரே!

சென்னை: இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், ப்ரியலையா நடிப்பில் உருவாகி வரும் இங்கு நான் தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான "குலுக்கு குலுக்கு" பாடல் வெளியாகி ரசிகர்களை வைபாக்கி வருகிறது.

பார்த்திபனின் டீன்ஸ் படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் இமான் தான் இசையமைப்பாளர். பாடலின் லிரிக் வீடியோவில் இசையமைப்பாளர் டி. இமான் ஆட்டம் போட்டுள்ள காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.\

D Imman dance for Santhanam s Inga Naan Thaan Kingu Kulukku Kulukku song

சிவகார்த்திகேயன் சார்பாக இந்த பாடல் வெற்றி பெறட்டும் என்கிற அளவுக்கு நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிவகார்த்தியேன் படங்களுக்கு: விஜய் நடித்து வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இமான். தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், நான் அவன் இல்லை, மைனா, சாட்டை, கும்கி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தார் டி. இமான். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மனம் கொத்தி பறவைக்கு இசையமைக்க ஆரம்பித்த இமான் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து வந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை என ஏகப்பட்ட வெற்றி ஆல்பங்களை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தவர் டி. இமான்.

சிவகார்த்திகேயன் இமான் சண்டை: ஆனால், அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. திடீர்னு ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் குறித்து பகீர் தகவலை வெளியிட்டு டி. இமான் பரபரப்பைக் கிளப்பினார். ஆனால், அதுகுறித்து சிவகார்த்திகேயன் எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. டி. இமான் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றார்.

சந்தானம் படத்தில்: இந்நிலையில் தற்போது சந்தானத்தின் 'இங்க நான் தான் கிங்கு' படத்துக்கு இசையமைத்து வருகிறார் இமான். நேற்று அவர் இசையில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. " குலுக்கு குலுக்கு" என குத்தாட்ட பாடலை போட்டு ரசிகர்களை மஜா பண்ண வைத்து வருகிறார் டி. இமான்.

இமான் ஆட்டம்: அந்த பாடலின் லிரிக் வீடியோவில் சந்தானம் மற்றும் ஹீரோயின் ஆடுவதை விட செம ஹேப்பியாக டி. இமான் ஆடி வருகிறார். அவரது பாட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X