இரண்டாவது திருமணத்திற்கு அவ்வளவு அவசரமா?.. டி இமானின் முன்னாள் மனைவி கொடுத்த பதிலடி!

சென்னை : இரண்டாவது திருமணம் செய்த டி இமானுக்கு முன்னாள் மனைவி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த D.Imman.. பொண்ணு யார் தெரியுமா ? | Filmibeat Tamil

முன்னணி இசையமைப்பாளரான டி இமான், மோனிகா என்ற பெண்ணை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து நவம்பர் மாதம் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.

ஆறே மாதத்தில் 2வது திருமணம்

ஆறே மாதத்தில் 2வது திருமணம்

விவாகரத்து கிடைத்த ஆறே மாதத்தில் டி இமான், கடந்த வாரம் மே 15ந் தேதி கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமெலியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நான் ஒரு முட்டாள்.

நான் ஒரு முட்டாள்.

மறுமணம் செய்துகொண்ட இமானுக்கு அவரது முதல் மனைவி மோனிகா, ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், டியர் இமான், உங்களின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். உங்களுடன் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை உடனடியாக உங்களால் எப்படி மாற்ற முடிகிறது. உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள்.

சொந்த மகளை கவனிக்கவில்லை

சொந்த மகளை கவனிக்கவில்லை

கடந்த 2 வருஷமா உங்க சொந்த மகள்களை நீங்கள் பார்க்கவோ, கவனிக்கவோ இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. உன் அப்பாவிடம் இருந்து என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.

மூன்றாவது மகள்

மூன்றாவது மகள்

அதையடுத்து, டி.இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இரண்டாவது ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், என்னுடைய திருமணம் குறித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

ரகிகர்கள் அதிருப்தி

ரகிகர்கள் அதிருப்தி

அவர் முன்னாள் மனைவி மோனிகா, சொந்த மகள்களை நீங்கள் பார்க்கவோ, கவனிக்கவோ இல்லை என பதிவிட்டுள்ளன நிலையில், இமான் மூன்றாவது மகள் என கூறியுள்ளதைப் பார்த்து டி இமானுக்கு எதிராக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மேலும், டி இமான், முதல் மனைவி மீது பொய் புகார் கூறிய தகவலும் வெளியாகி உள்ளதால் இமானின் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X