Sivakarthikeyan - என்னது எங்க டைவர்ஸுக்கு காரணம் சிவகார்த்திகேயனா?.. உண்மையை உடைத்த டி.இமானின் முதல் மனைவி

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் மீது இமான் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக இமானின் முதல் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

D.Imman First Wife Monicka Talks about Sivakarthikeyan Imman Controversy

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் சிவகார்த்திகேயன் நடித்த மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

பிரிந்த கூட்டணி: இந்த சூழலில் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை. அதனை கவனித்த ரசிகர்கள் இந்தக் கூட்டணிக்கு என்னதான் ஆச்சு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க டி.இமான் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இமான் பேசிய விஷயம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்தது.

D.Imman First Wife Monicka Talks about Sivakarthikeyan Imman Controversy

துரோகம்: அந்தப் பேட்டியில் பேசிய இமான், "சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அந்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது. எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அது என்ன துரோகம் என்று வெளியில் சொல்லமாட்டேன். அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் இருந்தால் மீண்டும் இணையலாம்" என்றார்.

விவாகரத்துக்கு காரணம்?: சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் சொல்லியதை அடுத்து பலரும் தங்கள் யூகங்களை வழக்கம்போல் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தனர். அதன்படி இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான் என்று ஓபனாக பேச ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட பேச்சுக்கள் இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது.

மோனிகா பேட்டி: இந்நிலையில் டி.இமானின் முதல் மனைவி மோனிகா இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், "எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும்.

D.Imman First Wife Monicka Talks about Sivakarthikeyan Imman Controversy

பஞ்சாயத்து பண்ணினார்: எனக்கும் இமானுக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று எங்கள் இருவருக்குமிடையே பஞ்சாயத்து செய்து வைக்க வந்தார். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று சமாதான முயற்சிகளை எடுத்தார். இமானுடைய விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவே இல்லை. நியாயத்து பக்கம் நின்றார். சிவகார்த்திகேயன் அப்படி செய்தது இமானுக்கு பிடிக்கவில்லை.

சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது இப்போது சிவகார்த்திகேயன்தான். இதற்காக நான் வருத்தப்படுகிறேன். பாவம் அவர்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X