இமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட
சென்னை: இசையமைப்பாளர் டி இமானுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களாக வந்து குவிகின்றன.
தமிழன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் இசையமைப்பாளர் டி.இமான் அவருக்கு முதல் படமே தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

எல்லோரும் போல இவரும் சினிமாவிற்கு வந்த பிறகும் சரி மிகவும் கஷ்டப்பட்டார் என்று தான் கூறவேண்டும். தனக்கென்று தனி பாணி இமானிடம் உள்ளது. 2002 ல் அறிமுகமானலும் இமான் 2010 பிறகு நன்கு அறியப்பட்டார். இமானுக்கு சரியாக பட வாய்ப்பு அமையாததே இதற்கு காரணம் என பலர் கூறுகின்றனர்.
2010 -ற்க்கு பிறகு இமான் ஆல்பம் எல்லாம் ஹிட் அடித்தது.அதற்கு உதாரணம் கிராமிய சாயல் உடைய பாடல்கள் அதிகம் இடம்பெற்றது தான்.
மைனா,கும்கி,தேசிங்கு ராஜா, வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் இவரது இசை மிகவும் பேசப்பட்டது. அதன் பின் நிறைய இயக்குநர்கள் இவரை நாடினார். எல்லாவிதமான படங்களுக்கு இசை அமைத்தார் இமான். தளபதி விஜய்யின் ஜில்லா தலயின் விஸ்வாசம் போன்ற படங்களில் இவரது தீம் மியூசிக் மிகவும் பிரபலமானது.
தற்பொழுது இயக்குநர் சிவா ரஜினியை வைத்து இயக்கும் புதிய படத்தில் இசையமைக்கிறார் டி.இமான் மிகச்சிறிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டி இருந்த இவருக்கு வரிசையாக பெரிய படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது உள்ளது.
இப்படத்தை பற்றி இமான் ஒரு பேட்டியில் கூறுகையில், படம் ரீலிஸ் சமயத்தில் மட்டும் கேட்கப்படும் பாடலாக இருக்காது. இப்படத்தின் ஆல்பம் பல வருடங்களுக்கு பேசு பொருளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!


Click it and Unblock the Notifications











