காதலன் காதலிக்கு பண்ணா ஓகே.. எனக்கு ஏன் இப்படி பண்றீங்க.. பிறந்தநாளில் எமோஷனலான இமான்!

சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் தனது பிறந்தநாளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உடன் கொண்டாடிய நிலையில், எமோஷனலாகி பேசிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இமான் 23 ஆண்டுகளுக்கு மேல் இசைத் துறையில் பணியாற்றி உள்ளேன் எனக் கூறினார்.

இதில், பல பிறந்தநாள் சந்தோஷமாகவும் சில பிறந்தநாள் சங்கடமாகவும் கடந்துள்ளன. ஆனால், முதல் முறையாக வித்தியாசமாக ஒரு படத்தின் அறிமுக விழாவில் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறேன் என்றும் பார்த்திபன் சாருக்கு நன்றி என்றும் பேசியுள்ளார்.

D Imman gets emotional at Parthiban Teenz movie

சிவகார்த்திகேயன் - இமான் பிரச்சனை: முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த டி. இமான் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பேசும் போது நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மறக்க முடியாத துரோகத்தை செய்து விட்டார் என்றும் அதை வெளியே சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்திற்கு இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து இனிமேல் பணியாற்ற முடியாது என்றும் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கடந்து போன சிவகார்த்திகேயன்: அயலான் படத்திற்கு பல பேட்டிகள் கொடுத்த சிவகார்த்திகேயன் எங்கேயும் இமான் குறித்த கேள்வியே எழாமல் பார்த்துக் கொண்டார். அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் ஹேட்டர்கள் பேசுவதையெல்லாம் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டேன் என்றே கூறி அந்த விவகாரத்தை கடந்து சென்றார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்: டி. இமான் இன்று தனது பிறந்தநாளை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் புதிதாக இயக்கி வரும் டீன்ஸ் படக்குழுவினருடன் கொண்டாடினார். பார்த்திபன் பிரத்யேகமாக கிஃப்ட் எல்லாம் கொடுத்து கேக் கட்டிங் எல்லாம் இமானுக்கு அரேஞ்ச் பண்ண நிலையில் அவர் ரொம்பவே எமோஷனலாகி விட்டார்.

இமான் பேச்சு: எத்தனையோ பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறேன். சில பிறந்தநாள் சந்தோஷமாகவும் சில பிறந்தநாள் கஷ்டமாகவும் கடந்துள்ளன. ஆனால், இந்த முறை வித்தியாசமாக உணர்கிறேன். கஷ்டங்களை எல்லாம் கடந்து வந்து பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனை என்னை இந்த படத்துக்கு 8 பாடல்களை போட வைத்துள்ளது. காதலன் காதலிக்கு இப்படி கிஃப்ட் கொடுத்தால் சரி, எனக்கு எல்லாம் இப்படி கொடுக்கணும்னு தோன்றியதற்கே பார்த்திபன் சாருக்கு நன்றி. அவருடைய நல்ல மனம் தான் வெளிப்படையாக தெரிகிறது. அவர் ஒரு குதர்க்கமான ஆளுதான். ஒன்லி பீஸ் என பார்த்திபனை பாராட்டி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X