சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த டி.இமான்.. பொண்ணு யார் தெரியுமா ?

சென்னை : இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது திருமணத்தை சத்தமே இல்லாமல் நடத்தி முடித்துள்ளார்.

Recommended Video

சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த D.Imman.. பொண்ணு யார் தெரியுமா ? | Filmibeat Tamil

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான்.

தமிழில் மைனா மற்றும் கும்கி படங்களின் மூலம் மிகவும் பிரபலமான டி இமான் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

டி இமான்

டி இமான்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் டி இமான், 2000ம் ஆண்டு வெளியான தில்ருபா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தனது இசைப்பயணத்தை தொடங்கினார். விசில் திரைப்படத்திற்கு பிறகே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக அறியப்பட்டார் இமான்.

பல படங்களில்

பல படங்களில்

டி இமான், தற்போது, தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார் டி இமான். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன.

விவாகரத்து

விவாகரத்து

கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட்டை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இமான். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் நிலையில், 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதாக அதாவது விவாகரத்து செய்துவிட்டதாக அண்மையில் தெரிவித்து இருந்தார் டி இமான்.

டி இமான் 2வது திருமணம்

டி இமான் 2வது திருமணம்

இந்நிலையில், இசையமைப்பாளர் டி இமான் சத்தமே இல்லாமல் தனது இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார். கோலிவுட் நடிகர் உபால்டின் மகளான அமெலியாவை இசையமைப்பாளர் டி இமான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

டி இமானின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், டி இமான் தனது மனைவி அமெலியாவுடன், இளஞ்சிவப்பு நிற உடையில் அழகாக காணப்பட்டார். மேலும், பாடகர் கிரிஷ், நடிகை சங்கீதா மற்றும் மூத்த நடிகை குட்டி பத்மினி ஆகியோர் இந்த புகைப்படத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X