எங்கம்மா சொர்க்கத்துக்கு போன நாள் இன்னைக்கு.. கலங்கிய கண்களோடு உருகும் இமான்.. வைரலாகும் போஸ்ட்!
சென்னை: தனது அம்மாவின் மறைவு நாளான இன்று அவர் நினைவால் இசையமைப்பாளர் இமான் போட்டுள்ள உருக்கமான ட்வீட் வைரலாகி வருகிறது.
கடந்த 2002ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.
விஸ்வாசம் திரைப்படத்திற்கு சிறந்த இசை அமைத்த அவருக்கு சமீபத்தில் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.

அம்மாவின் நினைவு நாள்
இசையமைப்பாளர் டி. இமானின் அம்மா மஞ்சுளா டேவிட்டின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்மா மறைந்து 13 ஆண்டுகள் ஆன பின்பும் தொடர்ந்து அவரது நினைவு நாளில் உருக்கமான பதிவுகளை இட்டு வருகிறார் டி. இமான். தற்போது அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி கேக்
கடந்த 2008ம் ஆண்டு மே 23ம் தேதி அம்மா கோமாவில் இருந்த நிலையில் மருத்துவமனையின் ஐசியூவிலேயே கேக் வெட்டி கொண்டாடினேன். ஆனால், அப்போது எனக்கும் அவருக்கும் தெரியாது, இதுதான் எங்களுக்கான கடைசி தருணம் என்று, பின்னர் மே 25ம் தேதியே அம்மா சொர்க்கத்துக்கு போயிட்டார் என பதிவிட்டுள்ளார்.

சொர்க்கத்தில் நிம்மதியாக
இசையமைப்பாளர் அம்மா மறைந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன நிலையிலும் தனது அம்மாவை மறக்காமல் இமான் உருக்கமாக பதிவிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சொர்க்கத்தில் அம்மா நிம்மதியாக உள்ளார் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவின் ஆசி இருக்கும்
இசையமைப்பாளர் இமானின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சொர்க்கத்தில் இருக்கும் அவரது அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இசையமைப்பாளர் இமான் உடனே எப்போதும் அவரது ஆசி இருக்கும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











