கோலிவுட்டில் அறிமுகமாகும் தமிழீழ ராப் பாடகி.. 'லாபம்' படத்தில் அசத்தல் பாட்டு.. டி.இமான் தகவல்!

By

சென்னை: தமிழ் ஈழத்தைச் சேர்ந்த ராப் பாடகியை லாபம் படத்தில் பாட வைத்துள்ளார், இசை அமைப்பாளர் டி.இமான்.

எஸ்.பி.ஜனநாதன் இப்போது இயக்கி வரும் படம், லாபம். இவர், இதற்கு முன், இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் விவசாய புரட்சியாளராக நடிக்கிறார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

ஸ்ருதி ஹாசன், சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன் வெளியிடப்பட்டது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

அந்த போஸ்டர், ஏர்கலப்பை, குழந்தையுடன் போராடும் பெண், ஆவேசமாக கோஷம் போடும் இளம் பெண், கையில் துப்பாக்கியுடன் குறிபார்க்கும் போலீஸ், இவர்களுக்கு நடுவில் ஒரு கையில் மைக்கும் ஒரு தோளில் ஒலிப்பெருக்கியுமாக விஜய் சேதுபதி குரல் எழுப்பிக் கொண்டிருப்பதுபோல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இதற்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை அருகே இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்தப் படத்தின் பாடல் ஒன்றை, தமிழ் ஈழத்தைச் சேர்ந்த பாடகியை வைத்து ரெக்கார்டிங் செய்துள்ளார் இசை அமைப்பாளர் டி.இமான்.

இசை அமைப்பாளர் இமான்

இசை அமைப்பாளர் இமான்

இதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் ஈழ ராப் பாடகி, CLEO VII-யை, லாபம் படத்துக்காகத் தமிழில் அறிமுகப் படுத்துவதில் பெருமைபடுகிறேன் என்று இமான் கூறியுள்ளார். தொடர்ந்து பல புதிய திறமையாளர்களை டி.இமான் அறிமுகப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

இதையடுத்து வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் CLEO VII. தமிழ் படத்துக்காக முதன்முறையாக ராப் பாடல் பாடியிருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார் கிளியோ VII. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இவர், ஏற்கனவே சில இசை ஆல்பங்களில் பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடுவது இதுதான் முதல் முறை. பாடலை தெருக்குரல் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X