டெடி படம் செய்த வரலாற்று சாதனை.. இசையமைப்பாளர் டி இமான் பெருமிதம்!

சென்னை : ஆர்யாவின் நடிப்பில் உருவான ரெடி படம் கடந்த மார்ச் மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

மோனோ கேப்சரிங் என்ற அதிநவீன படப்பிடிப்பு முறையை பயன்படுத்தி டெடி பொம்மையை பேசி நடிக்க வைத்திருப்பார்கள்.

ஓடிடியில் நேரடியாக வெளியாகி அதிக அளவு பார்வையாளர்களை கொண்ட திரைப்படமாக கொண்டாடப்பட்ட டெடி இப்பொழுது புதிய சாதனை ஒன்றை செய்துள்ளதை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்துள்ளார்.

தமிழில் மோஷன் கேப்சர்

தமிழில் மோஷன் கேப்சர்

நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் என அற்புதமான படைப்புகளை தந்த சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரெடி. கோச்சடையான் படத்திற்கு பிறகு தமிழில் மோஷன் கேப்சர் என்ற அதிநவீன தொழில்நுட்ப முறையை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

ஓடிடி தளத்தில்

ஓடிடி தளத்தில்

பெரும் எதிர்பார்ப்புடன் திரையில் வெளியாகயிருந்த இப்படம் சில சூழ்நிலைகள் காரணமாக நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட் ஸ்டாரில் மார்ச் மாதம் வெளியானது. பேசும் டெடி,ஆழமான காதல், மருத்துவத்துறையில் நடக்கும் மாஃபியாக்கள் என மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என கொண்டாடப்பட்டது.

சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள்

சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள்

மருத்துவத்துறையில் நடக்கும் உடல் உறுப்பு திருட்டு எவ்வாறெல்லாம் நடக்கிறது எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை மையக் கருவாகக் கொண்டு டெடி பொம்மையை ஒரே முக்கிய ரோலில் நடிக்க வைத்து சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்தின் சிறந்த விஎஃப்எக்ஸ் காட்சிகள் நம்பத்தகுந்த வகையில் இருந்ததால் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார்.

டி இமான் பெருமிதம்

டி இமான் பெருமிதம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் வாங்கியிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஏற்கனவே ஓடிடியில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்த இப்படம் தொலைக்காட்சியில் வரலாறு காணாத அளவிற்கு டிஆர்பியை எகிற செய்துவிட்டது. அதன்படி டிஆர்பி ரேட்டிங் 11.9 பதிவாகியிருந்தது. இதை இசையமைப்பாளர் டி இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார்.


More from Filmibeat

Read more about: d imman டி இமான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X