D Imman: வாய் நனைய முத்தமிட்டு.. டி. இமான் உடன் இணைந்த பார்த்திபன்.. புலம்பலுக்கு கிடைத்த சான்ஸ்?
சென்னை: கடந்த ஆண்டு எதற்கும் துணிந்தவன் முதல் கழுவேர்த்தி மூர்க்கன் வரை பல படங்களுக்கு இசையமைத்து வந்த டி. இமானுக்கு சமீப காலமாக பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வராமல் போனது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து விட்டார் என்றும் அதை வெளியே சொன்னால் தனது பெண் குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கும் என குண்டை தூக்கிப் போட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் பார்த்திபனின் அடுத்த படத்துக்கு டி. இமான் இசையமைக்கப் போவதாக விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பார்த்திபன் அறிவித்துள்ளார்.
பார்த்திபன் படத்தில் டி. இமான்: டி இமான் தனது படத்திற்கு இசையமைக்கப் போவதை மறைமுகமாக தெரிவிக்க முதலில் இப்படியொரு ட்வீட்டை பார்த்திபன் போட்ட போதே, அந்த டி மானை பார்த்து ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டனர்.
A . மான்
B . மான்
C . மான்
D . மான்
E . மான்
F . மான்
G . மான்
Plus
V . மான்
U . மான்
W . மான்
C . மான்
Y . மான்
Z . மான்
இப்படி 7 ஆண் மான் குட்டிகள் plus
6 பெண் மான் குட்டிகள் பங்குபெறும்
An adventurous thriller படத்தை
இயக்கி தயாரித்து படத்தை வெளியிடுமுன்,
படத்தின் தலைப்பை முன்கூட்டியே வெளியிடும்
யோசனையில் மூழ்கி ....குபுக் ....குபுக்....குபுக் !
(மூழ்கும்போது நீர் குமிழ்கள் வெளியேறும் சப்தம்)
இப்படத்தில் மேலே உள்ள 13 புள்ளி மான்களோடு ன்னொரு பெரும் புள்ளி மானுடன்
இம்மானுடன் இணைகிறேன்.
அம்மானின் பெயர் மேலே உள்ள 13-ற்குள் ஒளிந்திருக்கும்,அந்த பெயரின் முதல் எழுத்து
மேலே உள்ள வார்த்தைகளில் விடுபட்ட முதல் எழுத்தாய் இருக்கும்.
பெரிய பெரிய படங்களுக்குக் கூட,இம்மாம் பெரிய
Suspense thriller announcement வந்ததில்லை.
இன்னாருன்னு டக்குன்னு சொல்றதை விட்டுட்டு
தேவையில்லா நீநீட்டு!
What to do?
இது போன்ற படங்களை கவனிக்க வைக்க கூடுதல் கவனம் கொள்ள வேண்டியதாய் உள்ளது.
அடுத்த postடில் அவர் பெயரை நீங்கள் வாசிக்கும் வரை , உங்கள் யூகங்களை நான்...
Have a great morning friends" என பதிவிட்டு இருந்தார்.
வாய் நனைய முத்தமிட்டு: மேலும், டி. இமான் தான் தனது அடுத்த படத்திற்கு இசை என்பதை அறிவித்த பார்த்திபன், வா'வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்...
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள் !!!
தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் .... இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார்.இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா'வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை.அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி...
இனிமை
இசையாய்...
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்!" என பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் டைட்டிலை அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











