இளையராஜா ஸ்டைல்ல அசத்தியிருக்கிறார் நம்ம இமான்.. அண்ணாத்த பிஜிஎம்ம கேட்டீங்களா..சும்மா அள்ளுது!
சென்னை: அண்ணாத்த டைட்டிலுக்கு இமான் அமைத்திருக்கும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு தலைப்பு அண்ணாத்த என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அசத்தல் மியூஸிக்
படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், வீடியோவாக படத்தின் பெயரை வெளியிட்டது. கறுப்பு பேக்கிரண்டில் சிவப்பு நிற எழுத்துக்களில் படத்தின் பெயர் அண்ணாத்த என கலக்கலாய் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பேக்கிரண்ட் மியூஸிக் அசத்தலாக உள்ளது.
கொண்டாடும் ஃபேன்ஸ்
இளையராஜாவின் ஆசை நூறு வகை பாடலை போன்று துள்ளலாக உள்ளது இமானின் இந்த பிஜிஎம். அதோடு அண்ணாத்த அண்ணாத்த என கோரஸும் இடம் பெற்றிருக்கிறது.
இந்தி வீடியோவில் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், சிவா உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இமானின் இந்த இசையை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டி இமான் முதல் முறை
நடிகர் ரஜினிகாந்தின் படத்திற்கு இதுவரை இளையராஜா, ஏஆர் ரஹ்மான், தேவா, அனிருத் என பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். ஆனால் இமான் இசையமைப்பது இதுதான் முதல் முறை. மியூஸிக் எப்படி இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு டைட்டில் வீடியோவிலேயே விருந்து கொடுத்திருக்கிறார் இமான்.

பின்னுக்கு சென்ற ட்ரம்ப்
இதனிடையே #Annaatthe #அண்ணாத்த, #Thalaivar168 ஆகிய ஹேஷ்டேக்குகளை ரஜினி ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதனால் காலை முதல் டாப் ட்ரென்டிங்கில் இருந்த ட்ரம்ப் ஹேஷ்டேக் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களிலும் ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஹேஷ்டேக்கே ட்ரென்ட்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











