D Imman: மினிமம் பட்ஜெட் மியூசிக் டைரக்டர் டி இமான்... ஆனா சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: இசையமைப்பாளர் டி இமான் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டில் மினிமம் பட்ஜெட் இசையமைப்பாளராக வலம் வரும் டி இமான், பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், டி இமானின் சம்பளம், சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.

டி இமான் சொத்து மதிப்பு
விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி இமான். 2002ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் டி இமானுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தன. இதனால் அடுத்தடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. கிரி, தக திமி தா, மதராஸி, ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம், நான் அவனில்லை, மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, பாண்டிய நாடு, விஸ்வாசம், அண்ணாத்த என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

 D Imman Net Worth: Music Composer D Immans Salary and Net Worth details in 2024

சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் டி இமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக டி இமான் - விஜய், டி இமான் - இயக்குநர் பிரபு சாலமன், டி இமான் - சிவகார்த்திகேயன் காம்போ ரசிகர்களிட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் சிவகார்த்திகேயன் கூட்டணி மட்டும் இனி நடக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.

சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் குறித்து திடுக்கிடும் சில சர்ச்சையான தகவல்களை டி இமான் வெளியிட்டார். முன்னதாக டி இமான் தனது முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது வென்றுள்ள டி இமான், இப்போது பார்த்திபன், விஜய் ஆண்டனி ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தயாரிப்பாளர்களின் இயக்குநர், மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற வரிசையில், இசையமைப்பாளர்களில் டி இமானும் இடம்பெற்றுள்ளார். ரொம்பவே குறைவான சம்பளத்தில் பாடல்களை சூப்பர் ஹிட்டாக்கிவிடுவது டி இமானின் மேஜிக் எனலாம். அப்படி கோலிவுட்டின் மினிமம் பட்ஜெட் படங்களுக்கு தனது இசையால் உயிர் கொடுத்து வரும் டி இமானின் சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு படத்துக்கு ஒன்று முதல் 2 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வாங்குகிறாராம். படங்கள் தவிர விளம்பரம், சீரியல் டைட்டில் பாடல்கள் ஆகியவற்றுக்கும் இசையமைத்து வருகிறார். இதன்மூலம் மாதம் 1 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 7 முதல் 9 கோடி ரூபய் சம்பாதிக்கும் டி இமானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆடி, BMW ரக கார்களையும் டி இமான் சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X