Imman - சிவகார்த்திகேயன் விவகாரம்.. அனைத்துக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பார்.. டி.இமான் ஓபன் டாக்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து இசையமைப்பாளர் இமான் மீண்டும் பேசியிருக்கிறார்.

D.Imman Open Talks about Sivakarthikeyan in Recent Press Meet

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக எஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்து வந்த பிரின்ஸ் தோல்வியடைய கடைசியாக வந்த மாவீரன் ஹிட்டடித்தது.

இமான் விவகாரம்: சூழல் இப்படி இருகக் இசையமைப்பாளர் டி.இமான் சில வாரங்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அந்த துரோகத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதை வெளியில் சொல்லவில்லை" என்றார்.

உடைந்த இமேஜ்: இமானின் இந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு சிவாதான் காரணமாக இருப்பார் என்று ஒருதரப்பினர் கூறினர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து; இமானுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யாமல் நியாயத்தின் பக்கம் நின்றார் அதைதான் இமான் துரோகம் என்கிறார் என்று விளக்கமளித்தார்.

வளர்ச்சியை தடுக்கத்தான்: ஒருபக்கம் சிவகார்த்திகேயனுக்கு எதிராக சிலர் பேசி வந்தாலும் மறுபக்கம் அவருக்கு ஆதரவு குரல்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதிலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இமான் கொடுத்த அந்தப் பேட்டியின் ஒரு பகுதியில் இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமில்லை சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று கூறிய வீடியோவை பகிர்ந்து இதை ஏன் பலரும் பகிரவில்லை. இதிலிருந்தே எஸ்கேவின் வளர்ச்சியை பிடிக்காமல்தான் அவர் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம் என பதிவிட்டுவருகின்றனர்.

D.Imman Open Talks about Sivakarthikeyan in Recent Press Meet

அவர் பார்த்துப்பார்: சிவகார்த்திகேயனை சுற்றி இவ்வளவு பஞ்சாயத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவரோ அமைதியாக தனது வேலையில் கவனத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இமானிடம் இன்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இமான், "இறைவன் பார்த்துக்கொள்வார், எது சரி எது தவறு என்பது மனிதர்களை தாண்டி இறைவனுக்கு கண்டிப்பாக தெரியும். அவர் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X