“எனது மூன்றாவது மகள்“… டி.இமான் பேஸ்புக்கில் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா ?

சென்னை : இசையமைப்பாளர் டி.இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இரண்டாவது திருமணம் குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் தந்தை, மகள் பாசத்தை விவரிக்கும் கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் பல முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமானுக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இதையடுத்து, இமானுக்கும், மோனிகாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து கிடைத்தது. இதையடுத்து, இசையமைப்பாளர் இமானுக்கு மே 15ந் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் குறித்து, இமான்,எந்த விதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், திருமணத்திற்கு பிறகு பேஸ்புக்கில் ஒரு பதிவினை போட்டுள்ளார்.

இமான் முகநூல் பதிவு

இமான் முகநூல் பதிவு

அதில், என்னுடைய திருமணம் குறித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஞாயிறுக்கிழமை, உபால்ட் என்பவரின் மகள் அமலியை நான் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய கடினமான தருணங்களில் என்னுடன் ஆதரவாக இருந்த எனது தந்தைக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன். கடந்த சில வருடங்களாக நானும் எனது குடும்பமும் சந்தித்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இது தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

எனது மூன்றாவது மகள்

எனது மூன்றாவது மகள்

எனக்கு அமலியை திருமணம் செய்து வைத்த என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி. அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய சொந்த மகள்களான வெரோனிகா மற்றும் பிளக்சிக்கா ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு வருத்ததை அளித்திருக்கிறது.

Recommended Video

சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்த D.Imman.. பொண்ணு யார் தெரியுமா ? | Filmibeat Tamil
அளவு கடந்த அன்பிற்கு நன்றி

அளவு கடந்த அன்பிற்கு நன்றி

அவர்களை இந்த நேரத்தில் என்னுடன் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் என்னிடம் விரைவில் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பேன். அமலி குடும்பம் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு என்னுடைய நன்றிகள் என்று டி இமான் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X